Just In
- 6 hrs ago
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- 9 hrs ago
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- 9 hrs ago
உங்கள நாள் முழுக்க நீரேற்றமா வைத்திருக்க இந்த மாதிரி தண்ணீர் குடிங்க போதும்...!
- 9 hrs ago
இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி
Don't Miss
- News
மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக!
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- Finance
டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..!
- Automobiles
2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகம் சுளிக்க வைக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சில விசித்திர தோற்றங்கள்!
அச்சமற்ற தைரியமான பாலிவுட் நடிகை தான் கங்கனா ரனாவத். இவர் நேர்மையான இன்டர்வியூ, ஐகானிக் திரைப்பட கதாப்பாத்திரங்களால் மட்டுமின்றி, அவர் மேற்கொள்ளும் சில ஸ்டைலாலும் அறியப்படுபவர். இந்த நடிகை பல வித்திரமான உடைகளை வைத்துள்ளார். அதோடு இவர் எப்போதுமே தனது ஸ்டைலை பரிசோதிப்பவர்.
ஆனால் இவரது வித்தியாசமான ஸ்டைல்கள் யாரையும் கவர்ந்திழுப்பது போன்று இருந்ததில்லை. இப்போது நடிகை கங்கனா ரனாவத் மேற்கொண்டு வந்த சில வித்தியாசமான தோற்றங்களைக் காண்போம்.

வித்தியாசமான புடவை
பொதுவாக பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கங்கனா ரனாவத் புடவையை அணிந்து வருவார். அப்படி ஒரு சர்வதேச நிகழ்ச்சி ஒன்றிற்கு கங்கனா காஞ்சிபுர புடவைக்கு வித்தியாசமாக கோர்செட் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். இதோடு கைகளில் ஊதா நிற ஓபரா கையுறைகளை அணிந்து வந்திருந்தார். நிச்சயம் இந்த மாதிரியான ஸ்டைலை எவரும் மேற்கொண்டதில்லை. ஆனால் கங்கனா துணிச்சலாக இப்படியொரு ஸ்டைலை மேற்கொண்டு வந்துள்ளார்.

கேட்சூட்
மிகவும் பிரபலமான கேன்ஸ் விருது விழாவிற்கு கங்கனா சிக்கலான கேட்சூட் அணிந்து வந்திருந்தார். இந்த மின்னும்படியான பாடிகான் கேட்சூட் கங்கனாவிற்கு சற்று விசித்திரமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஃப்ரிடா கஹ்லோ தோற்றம்
கங்கனா ரனாவத் ஒருமுறை ஃப்ரிடா கஹ்லோ பாணியில் வந்திருந்தார். அதுவும் இவர் பூப்பிரிண்ட் போடப்பட்ட குர்தா மற்றும் கோடு போடப்பட்ட ட்ரௌசர் போட்டு, தலைக்கு மலர் தலைக்கவசத்தை அணிந்து வந்திருந்தார்.

கின்கி ஆடை
கங்கனா ரனாவத் ஒருமுறை கின்கி ஆடை அணிந்து வந்து ஆச்சரியப்படுத்தினார். ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் கருப்பு மற்றும் கோல்டன் நிற பட்டைகள் மற்றும் கொக்கிகள் கொண்ட ஒரு ஆடையை அணிந்து வந்திருந்தார்.

கிமோனா குர்தா
கங்கனாவிற்கு பாரம்பரிய உடைகளை அணிவது பிடிக்கும். ஒருமுறை இவர் மஞ்சள் நிற குர்தா அணிந்து, அதற்கு மேலே மின்னும் சில்க் ஜாக்கெட் அணிந்து, கிமோனோவின் தோற்றத்தைப் பிரதிபலிக்குமாறு வந்திருந்தார்.

கருப்பு நிற கார்டர்
நிகழ்ச்சி ஒன்றின் போது, கங்கனா ரனாவத் பச்சை நிற தை-ஹை ஸ்லிட் உடை அணிந்து வந்திருந்தார். இந்த தோற்றத்தில் என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை, இவர் தொடையில் கவர்ச்சிகரமான கருப்பு நிற கார்டர் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற பேண்ட் சூட்
கங்கனாவிற்கு போல்ட்டான தோற்றத்தைக் கொடுக்கும் உடைகளை அணிவது என்றால் பிடிக்கும். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றிற்கு இவர் கருப்பு நிற பேண்ட் சூட் ஒன்றை அணிந்து வந்திருந்தார். அப்போது அவர் வெள்ளை நிற இடுப்பு கோர்ட்டுடன் நெக்லைன் ப்ளேஸரை அணிந்திருந்தார்.