Just In
Don't Miss
- News
நெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Sports
கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் சும்மா கும்மு-ன்னு இருக்கும் போட்டோவை வெளியிட்ட காஜல்!
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தனது காதல் கணவரைக் கரம் பிடித்தார். காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபரான கௌதம் கிட்சுலுவிற்கும் சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைத்து சிம்பிளாக இவரது திருமணம் நடைபெற்றது.
நடிகை காஜல் அகர்வால் தனது திருமண விஷயத்தை அக்டோபர் முதல் வாரத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் இவருக்கு ஜூன் மாதமே கௌதம் கிட்சுலுவுடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் காஜல் அகர்வால் நிச்சயதார்த்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதில் நிச்சயதார்த்தத்தின் போது மஞ்சள் நிற புடவையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கீழே அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
MOST READ: திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்!

மஞ்சள் நிற புடவை
காஜல் அகர்வால் தனது நிச்சயதார்த்தத்திற்கு பிரபல ஃபேஷன் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த அழகிய மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையானது எடை குறைவானது மட்டுமின்றி, அழகிய பூ டிசைன்களையும் கொண்டது. இந்த புடவையில் காஜல் மிகவும் அழகிய பூ போன்று காணப்பட்டார்.

எம்பிராய்டரி ஜாக்கெட்
காஜல் அகர்வால் மஞ்சள் நிற புடவைக்கு அழகிய பூ எம்பிராய்டரி போடப்பட்ட, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார். அதோடு இந்த ஜாக்கெட்டின் பின்புறம் மஞ்சள் நிற லேயர்கள் கொண்டிருந்தது, ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

காஜல் மேக்கப்
காஜல் அகர்வால் இந்த மஞ்சள் புடவைக்கு பொருத்தமான மேக்கப் போட்டிருந்தார். அதில் உதடுகளுக்கு அடர் பிங்க் நிற லிப்ஸ் டிக் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்திருந்தார். அதோடு கண்களின் அழகை கூட்ட காஜல் போட்டிருந்தார்.

காஜல் ஆபரணங்கள்
காஜல் மஞ்சள் நிற புடவைக்கு கழுத்திற்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல், காதுகளுக்கு கண்களைக் கவரும் பெரிய காதணியையும், கைக்கு வளையலையும் அணிந்திருந்தார். உண்மையிலேயே இம்மாதிரியான தோற்றம் அட்டகாசமாகவே உள்ளது. இவர் அணிந்திருந்த ஆபரணங்களை வடிவமைத்ததும் மனீஷ் மல்ஹொத்ரா தான்.

மாஸ்க்குடன் காஜல் மற்றும் கௌதம்
கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர், மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து உடைகளுடனும் சேர்ந்து மாஸ்க் வருகிறது. அதேப் போல் காஜல் அகர்வால் அணிந்துள்ள புடவைக்கும் பொருத்தமான மாஸ்க்கை மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்திருந்தார். அதேப் போல் கௌதம் கிட்சுலு அணிந்திருந்த ஷெர்வானிக்கும் பொருத்தமான மாஸ்க் இருந்தது.

ரொமான்டிக் போஸ்
இது நிச்சயதார்த்தத்தின் போது காஜல் தனது கணவருடன் சேர்ந்து ரொமான்டிக்காக கொடுத்த போஸ்.