Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
செக்ஸியான லெஹெங்கா அணிந்து தோழியின் திருமணத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா...
ஹன்சிகா சமீபத்தில் தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அட்டகாசமான லெஹெங்காவை அணிந்திருந்தார். அதோடு அந்த திருமணத்தில் ஆட்டமும் போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் என்ன தான் சமீப காலமாக திரைப்படங்களில் தென்படாவிட்டாலும், சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். திரைப்படங்களில் நடிக்கும் ஆரம்ப காலத்தில் கொழுகொழுவென்று இருந்த ஹன்சிகா, பின் தனது எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி க்யூட்டாக உள்ளார்.

ஹன்சிகா சமீபத்தில் தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அட்டகாசமான லெஹெங்காவை அணிந்திருந்தார். அதோடு அந்த திருமணத்தில் ஆட்டமும் போட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். கீழே தோழியின் திருமணத்தில் பங்கு கொள்ளும் போது ஹன்சிகா மேற்கொண்டிருந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மின்னும் லெஹெங்கா
இது தான் தோழியின் திருமணத்தின் போது ஹன்சிகா மோத்வானி அணிந்திருந்த மின்னும் லெஹெங்கா. ஹன்சிகா அணிந்திருந்த யானைத் தந்த நிறம் கொண்ட லெஹெங்காவை வடிவமைத்தவர் டிசைனர் அபினவ் மிஷ்ரா ஆவார்.

ஜரிகை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள்
ஹன்சிகா அணிந்திருந்த லெஹெங்கா செட் மூன்று பீஸ்களைக் கொண்டது. அதில் இடுப்புக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட பெரிய லெஹெங்கா, ஒரு ஜாக்கெட் மற்றும் ஒரு பட்டு துப்பட்டா. இந்த லெஹெங்கா கண்ணாடி மற்றும் ஜரிகை வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தால், பளபளவென்று மின்னும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குறிப்பாக இந்த லெஹெங்காவின் இடுப்பு பகுதி மற்றும் கீழ் பார்டர் பகுதியில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.

மேக்கப்
ஹன்சிகா நல்ல பால் போன்ற நிறத்தைக் கொண்டவர். எனவே இவருக்கு அவ்வளவாக மேக்கப் தேவைப்படாது. இருப்பினும், இந்த உடைக்கு இவர் கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்துக் கொண்டு, உதட்டிற்கு நியூட் நிற லிப்ஸ்டிக் என லேசாக மேக்கப் போட்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஹேர் ஸ்டைல் என்று வரும் போது ஹன்சிகா இந்த உடைக்கு சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு, லேசாக கர்ல்ஸ் செய்திருந்தார். இது இவருக்கு இந்த உடையில் ஒரு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

ஆபரணங்கள்
ஹன்சிகாவின் ஆபரணங்களைப் பற்றி பேசுவதானால், இவர் கழுத்தில் எமரால்டு மற்றும் வைரம் பதிக்கப்பட்ட போல்கி முத்து நெக்லேஸ் மற்றும் காதுகளில் அக்குவாமெரின் காதணிகளையும் அணிந்திருந்தார். அதோடு இவர் கைகளில் தங்க வளையல்களை அணிந்திருந்தார். இது இவருக்கு ஒரு முழுமையான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுத்தது.



Click it and Unblock the Notifications