கருப்பு மற்றும் நீல நிற ஆடையில் சிக்கென்று போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

By: Aruna Saravanan
Subscribe to Boldsky

ஐஸ்வர்யா ராய் என்றாலே அழகு தான். அடேங்கப்பா எத்தனை அழகு. பார்க்க பார்க்க திகட்டாத அழகு. அவர் உலக அழகியாக முடி சூட்டப்பட்ட நாளிலிருந்தே அவரின் அழகு அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. இன்றும் அன்று போல் அதே பொலிவுடன் திகழ்கின்றார்.

வண்ணங்களில் அனைத்து வண்ணங்களும் அழகு தான். அதிலும் அவற்றை ஐஸ் அணிந்தால் வண்ணங்களுக்கே அழகு. அதுவும் கருப்பு நிறம் அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஐஸ் கருப்பு நிற ஆடையை மிகவும் விரும்பி அணிந்து கொள்கின்றார்.

அழகிய பால் போன்ற நிறத்தில் இருக்கும் ஐஸ் கருப்பு நிற ஆடையில் வரும் பொழுது எத்தனை அழகு என்று சொல்ல தோன்றும். சமீபத்தில் Longines watch விளம்பரத்திற்கு வரும் ஐஸ் கருப்பு நிற ஆடையில் மிகவும் அழகாய் இருக்கினறார். முன்னாள் உலக அழகியான ஐஸ் இந்திய சினிமாவின் தற்போதய சூப்பர் ஸ்டார். இவர் கருப்பு நிறத்தை மிகவும் விரும்புகின்றார். இதில் அவர் Longineswatch விளம்பரத்திற்கு வரும் படங்களை காணலாம். கவர்ச்சிகரமான கருப்பு மேக்ஸி கவுனில் மிகவும் அழகாக இருந்தார். இவரை தவிர வேரெவராலும் கருப்பை இவ்வளவு நேர்த்தியாக உடுத்த முடியாது.

Aishwarya Rai's Hot Black And Blue Looks For Longines, November Issue

அடுத்த படத்தில் நீல நிற உடையில் Longines-க்காக ஐஸ். இதில் இவர் நீல நிற ஸ்வெட்டர் மற்றும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வரும் பேண்ட் அணிந்துள்ளார். நாகரிக காலத்து உடையின் ஸ்டைலை மிகவும் அழகாக காட்டியுள்ளார். இந்த உடையில் ஐஸ்வர்யா மிகவும் மிடுக்காக உள்ளார்.

Aishwarya Rai's Hot Black And Blue Looks For Longines, November Issue

அடுத்த படம் நவம்பர் 2015 ஆம் ஆண்டு Longines watch விளம்பரத்திற்காக எடுத்தது. இதில் பாரம்பரிய அழகின் தனித்தன்மையை காண முடியும். இதில் ஸ்லீவ்வெஸ் கொண்ட கருப்பு நிற ஆடையை உடுத்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக காணப்படுகின்றார். இதுவும் உங்களுக்கு பிடிக்காமல் போகுமா என்ன.

Aishwarya Rai's Hot Black And Blue Looks For Longines, November Issue

ஐஸ் வரும் எல்லா விளம்பரமும் அழகுதான். அதுவும் Longines விளம்பரத்தில் அவரை காண இரண்டு கண் போதாது. என்ன உங்களுக்கும் பிடித்துள்ளதா..?

English summary

Aishwarya Rai's Hot Black And Blue Looks For Longines, November Issue

Hot Aishwarya Rai Bachchan was seen doing a photoshoot for Longines, November 2015. She was donning in black gowns, dresses and blue sweater and pant.
Story first published: Friday, December 11, 2015, 18:30 [IST]
Subscribe Newsletter