அண்ணன் பாண்டியாவின் #SuperDuper ரொமாண்டிக் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky
Krunal Pandya's Awesomatic Wedding Photoshoot!

இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் பல பேச்சுலர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். புவனேஸ்வர் குமார், ஜாகிர் கான் தொடங்கி விராத் கோலி வரை பலர் திருமணம் முடித்துவிட்டனர். இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளவர் இந்திய அணியின் அண்ணன்-தம்பி காம்போ பாண்டியா பிரதர்களில் மூத்தவர் குர்ணல் பாண்டியா.

குர்ணல் பாண்டியா மற்றும் அவரது வருங்கால மனைவி சேர்ந்து எடுத்துக் கொண்ட ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் பார்ப்பவர்கள் அனைவரும் கண்களும் படும் அளவிற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. கிரிக்கெட்டை தீமாக கொண்டு ஒரு அசத்தலான ரொமாண்டிக் போட்டோஷூட் எடுத்துள்ளனர் வருங்கால மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் குர்ணல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல்!

காதல்!

ஆரம்பத்தில் குர்ணல் பாண்டியா மற்றும் பங்குரி ஷர்மா இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்துகள் வெளியாகின. பிறகு, அவரே முன்வந்து திருமணம் நிச்சயம் தான் ஆகியுள்ளது. இனிமேல் தான் திருமணம் செய்துக் கொள்ள விருக்கிறோம் என பதில் அளித்தார்.

திட்டம்!

திட்டம்!

நிருபர்களிடம் பேசும் போது தங்கள் திருமண திட்டம் பற்றியும் கூறியிருந்தார் குர்ணல் பாண்டியா. இந்த திருமணத்தில் பிரபலங்கள் அதிகம் யாரும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது ஒரு குடும்ப நிகழ்வாக தான் இருக்கும். நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்குபெறுவார்கள் என அறிவித்திருந்தார்.

அமைப்பினர்!

அமைப்பினர்!

குர்ணல் பாண்டியா மற்றும் பங்குரி ஷர்மாவின் திருமணத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் பிக் பாஸ் ஈவண்ட்ஸ் என்னும் அமைப்பினர் தான் ஏற்பாடு செய்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

திருமண நாள்...

திருமண நாள்...

மேலும், தனது திருமணம் குறித்து குர்ணல் பாண்டியா அளித்த பேட்டியில், இனிமேலும், எந்த புரளிகளும் வரக் கூடாது என தனது திருமண நாளையும் தெளிவாக குறிப்பிட்டுவிட்டார். வரும் டிசம்பர் 26ம் நாள் தான் குர்ணல் பாண்டியா பங்குரி சர்மாவிடம் கைதாகவிருக்கிறார்.

மும்பை!

மும்பை!

திருமணம் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ நடந்தாலும், திருமண வரவேற்ப்பை விமர்சியாக செய்ய திட்டமிட்டுள்ளனர் பாண்டியா குடும்பத்தினர். மும்பையில் இருக்கும் மரியாட் எனும் இடத்தில் தான் இவர்களது திருமண வரவேற்ப்பு நடக்கவிருக்கிறது.

முதல் சந்திப்பு!

முதல் சந்திப்பு!

குர்ணல் பாண்டியா மற்றும் பங்குரி ஷர்மா முதன் முதலில் ஒரு காமன் நண்பரின் வீட்டில் தான் சந்தித்துள்ளனர். பிறகு இந்த உறவு தனிப்பட்ட நட்பாக மாறி, பின் நட்பு பயணம் காதல் பயணமாக மாறியுள்ளது.

இன்று காதல் இல்வாழ்க்கையில் இணைந்து, வாழ்நாள் பயணமாக மாறவிருக்கிறது.

கண்ணுப்பட போகுதய்யா!

கண்ணுப்பட போகுதய்யா!

குர்ணல்பாண்டியாவும், பங்குரி ஷர்மாவும் அந்த ஒயிட் அன்ட் ஒயிட் உடையிலும், பிளாக் அன்ட் பிளாக் உடையிலும் மிக அழகாக தோற்றம் அளிக்கின்றன. நிச்சயம் பெரிய சைஸ் பூசணிக்காயை வைத்து சுற்றிப் போட வேண்டும்.

பங்குரி ஷர்மா நட்பாக இருந்த போதிருந்த குர்னலுக்கு நல்ல துணையாக இருந்துள்ளார். வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுக்க உதவியுள்ளார் என கூறப்படுகிறது.

அவுட்!

அவுட்!

கிரிக்கெட் போன்ற விளையாட்டை வேலையாக தேர்வு செய்யும் போது அதற்கு பெரிய பலம் தேவை. இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. குர்ணலின் கிரிக்கெட் காதலுக்கு பக்கபலமாக இருந்தவர் பங்குரி சர்மாதான் என கூறப்படுகிறது.

ஆல் இஸ் வெல்!

ஆல் இஸ் வெல்!

குர்ணல்பாண்டியா மற்றும் பங்குரி ஷர்மாவின் இல்வாழ்க்கை இந்த போட்டோஷூட் போலவே சூப்பர் டூப்பர் ரொமாண்டிக்க அமைய அனைவர் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோமாக!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krunal Pandya's Awesomatic Wedding Photoshoot!

Krunal Pandya's Awesomatic Wedding Photoshoot!
Story first published: Friday, December 22, 2017, 15:29 [IST]