For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஃபேஷன்' படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதிலிருந்து சில ஸ்டைல் குறிப்புகளை சுடலாம் வாங்க...

By Srinivasan P M
|

2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபேஷன் என்கிற மாதுர் பண்டார்கர் இயக்கிய இந்திப் படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் திரைக்கதை பாராட்டும் விதத்தில் அமைந்திருக்கும். சலீம் சுலைமான் இதற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் மிக மிக இதமானதாகவும், அருமையாகவும் அமைந்திருந்தன. இதில் பிரியங்கா சோப்ரா மேக்னா மாத்தூர் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவர் ஒரு சாதாரண ஊர் பெண்ணாக இருந்து ஒரு சூப்பர் மாடலாக மாறுவதாக கதை அமைத்திருந்தனர்.

மிகவும் கவர்ச்சியான இந்தப் படம் இந்திய ஃபேஷன் துறையில் பெண்களின் ஆதிக்கத்தை காட்டுவதாகவும், பெண்ணியத்தை மையமாகக் கொண்டதாகவும் அமைந்தது. கங்கனா ரனாவத், முக்தா கோட்சே மற்றும் அர்பாஸ் கான் ஆகியோரும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஃபேஷன் துறையின் உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஃபேஷன் திரைப்படம்.

உணர்ச்சி, பாதிக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம், கவர்ச்சி, புகழ், இச்சை, ஏமாற்றம், சமாதானம்... இப்படி பல பரிமாணங்களாக எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் அடக்கியதாக இருந்தது. ஆனால் ஃபேஷன் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த சாராம்சங்கள் சிதையாமல் படமாக்கியிருந்தனர். கதையும் படத்தின் பெயரும் சற்றும் விலகாதவாறு பிண்ணிப் பிணைந்திருக்கும். இந்தப் கவர்ச்சிப் படத்தை சற்றுப் பிரித்து மேய்ந்து ஸ்டைல் டிப்ஸ் ஏதாவது சுடமுடியுமான்னு பாக்கலாம் வாங்க.

Remember The Movie Fashion? Yes? Let's Steal Some Style Tips From It

1. கங்கனா ரனாவத் இந்தப் படத்தில் ஷோனாலி குஜ்ரால் பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அவர் இதில் ஒரு அதிரடியான மிகவும் முரட்டுத்தனமான அந்தப் பாத்திரத்திற்கே பொருத்தமான ஒரு கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவர் ஒரு கருப்பு நிற டாஸலையும், ஷீர் கவுனையும் அணிந்திருப்பார். இதற்கு முன் எவரும் செய்திராத செய்யமுடியாத வகையில் மிக அருமையாக அவர் நடித்திருப்பார்.

2. ஒரு முன்னேறத் துடிக்கும் மாடலாக மேக்னா மாத்தூர் பாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தப்படுவார். அவருக்கு இது முதல் ஃபேஷன் ஷோவாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்திருப்பார். அவர் போமியான் எம்ப்ராயிடரி கவுனில் வலம் வருவார். இந்த கவுன் அடிப்பகுதியில் மடிப்புகளுடன் சற்று பரந்து விரிந்தபடி இருக்கும். அனைத்திலும் சிறப்பு அவர் அணிந்த மின்னும் ராணிக்கே உரிய கிரீடம். அது அவரை ஒரு புரட்சி ராணியாக நன்கு அடையாளம் காட்டியது.

3. முக்தா கோட்சே அணிந்திருக்கும் கவர்ச்சியான மின்னும் பிகினி உடைக்கு ஈடு இணை இருக்க முடியாது. கவர்ச்சி மற்றும் அழகிற்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணமாக அவருடைய உருவம் திகழும். டசல் நாடாவுடன் கூடிய ஒரு வெள்ளி நிற செக்வின் பிகினியை அவர் அணிந்திருந்தார். அவர் எவ்வளவு அருமையாகத் தோற்றமளித்தார் என்றால் இன்றும் கூட இளம் பெண்கள் அவர் பீச் லுக்கை விரும்பி ரசிக்கின்றனர்.

மொத்தத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஃபேஷன் மற்றும் ஸ்டைல் அனைவரையும் மிகவும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் உடனே முயற்சி செய்து பார்க்கலாமே? பாலிவுட் ஃபேஷன் செய்திகளில் இன்றைக்கு இவ்வளவு தான்.

English summary

Remember The Movie Fashion? Yes? Let's Steal Some Style Tips From It

The movie Fashion was very inspiration and motivational for the real life models. The style and fashion was immense, specially in the marjaawan song.
Desktop Bottom Promotion