திரை நட்சத்திரங்களின் அசத்தலான பேஷன் ஷோ!

Posted By:
Subscribe to Boldsky

2018க்கான லேக்மீ ஃபேஷ்ன் வீக் மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருக்கும் டிசைனர்களுக்கு இது மிகச் சிறந்த மேடையாக இந்த பேஷன் ஷோ அமைந்திடும்.

டிசைனர்களின் அட்டகாசமான சம்மர் கலெக்‌ஷன்களுக்கு இது பேஷன் ஷா புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. டிசைனர்களின் ஸ்டைலிங் கலெக்‌ஷன்களுக்கு பல்வேறு செல்பிரிட்டிகள் ரேம்ப் வாக் மேற்கொண்டு அசத்தியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிதி அகர்வால் :

நிதி அகர்வால் :

சோலாகா சுதாகர் டிசைன் செய்த ஆடையில் ரேம்ப் வாக் மேற்கொண்ட நிதி அகர்வால் அழகாக காட்சியளித்தார். பேஸ்டல் பிங் நிற லெஹங்கா சோளியுடன் பேஸ்டல் ப்ளூ நிற ப்ளவுஸ் கச்சிதமாக பொருந்தியிருந்தது.

அதற்கு மேட்சிங்காக காதணிகள் மற்றும் வளையல் ஆகியவை நிதிக்கு பக்கவாக பொருந்தியது. பார்க்க திருமணப் பெண் போலவே இருந்தார்.

திசா படானி :

திசா படானி :

திசா இந்த நிகழ்ச்சியில் ஏஞ்சலிக் லுக்கில் அசத்தினார். இவரது ஆடையை வடிவமைத்தவர் ஸ்ரியா சோம். முழுவதும் கட்டப்பட்டு பின்னப்பட்ட கவுன் அணிந்திருந்தார். இளம் வெள்ளை நிறத்திலான இந்த உடையில் இளவரசி போல காட்சியளிட்த்ஹார் திசா.

ரேம்ப் வாக்கின் போது இவரது ஒய்யார நடை அனைவரையும் கவர்ந்தது.

தமன்னா பாஹ்டியா :

தமன்னா பாஹ்டியா :

அனுஷ்கா ரெட்டி உருவாக்கியிருந்த லெஹங்காவில் கலந்து கொண்டவர் தமன்னா. கோல்ட் ஷோல்டர் லெஹங்கா மற்றும் ப்ளோரல் டிசைனுடன் லெஹங்கா கிராண்ட் லுக்குடன் இருந்தது.

இதற்கு லைட் நெட்டட் ஷால் கச்சிதமாக பொருந்தியது.

அதிதி ராவ் ஹைத்ரி :

அதிதி ராவ் ஹைத்ரி :

சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைபடத்தில் அலாவுதீன் கில்ஜியின் மனைவியாக மெஹரூநிஷாவாக நடித்து நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார் அதிதி. அதே போல இப்போது பாயல் சிங்காலின் டிசைனர் உடை அணிந்து வந்திருந்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.

சில்வர் எம்பிராய்டரி கொண்ட லெஹங்கா சோலி அணிந்திருந்தார் அதற்கு மேட்சிங்கான தோடு மற்றும் தங்க நிறத்திலான வளையல் ஆகியவை ஹைலைட்டாக இருந்தது.

க்ரிதி சனோன் :

க்ரிதி சனோன் :

தருண் தஹில்லானி உருவாக்கிய ஃப்ளோரல் பேஸ்டல் லெஹங்கா சோலியை க்ரிதி அணிந்திருந்தார். ஸ்டைலிஷ் லுக்கில் பார்ப்பவர்களின் கண்ணை கவர்ந்தார் க்ரிதி. ரேம்ப் வாக் முடிந்ததும் இந்த பேஸ்டல் ஷேடட் உடை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்லியிருக்கிறார் க்ரிதி.

கரண் ஜோஹர் :

கரண் ஜோஹர் :

தனக்கு பிடித்த ஆடை அணிவதை இன்றளவும் தொடர்கிறார் கரன் ஜோஹர். எப்போதும் மூர்க்கத்தனமான ஆடையை அணிந்து வரும் கரண் இந்த முறை அதற்கு நேர் எதிர்மறையான உடையை அணிந்திருந்தார். உடையில் மெட்டாலி லுக் கூலர்ஸுடன் கூலாக காட்சியளித்தார் கரண். இந்த உடையை தயாரித்திருந்தது ஃபல்குனி மற்றும் ஷேன் பீகாக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, wardrobe, bollywood, celebrities
English summary

Best Dressed Celebrity Show Stoppers At Lakme Fashion Week

Best Dressed Celebrity Show Stoppers At Lakme Fashion Week
Story first published: Tuesday, February 6, 2018, 12:54 [IST]
Subscribe Newsletter