தோழியின் திருமணத்தில் நடிகை செய்த வேலையப் பாருங்க! (வீடியோ)

Posted By:
Subscribe to Boldsky
தனது தோழியின் திருமணத்தில் ஆலியா பட் போட்ட ஆட்டம்- வீடியோ

இதுவரை பாலிவுட் அழகி ஆலியா பட்டின் அழகான பல்வேறு லுக்ஸ்களை பார்த்திருப்போம். இந்நிலையில் ஆலியாவின் நெருங்கிய தோழியான க்ரிபா மெஹ்தாவின் திருமணம் ஜோத்பூரில் நடந்திருக்கிறது.

அங்கு மணமகளுடன் மணமகளின் தோழியான ஆலியாவின் ஸ்டைல் மற்றும் லுக் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது. இவர்களோடு தோழி அகன்ஷா ரஞ்சனும் சேர்ந்து செய்த லூட்டிகள் எல்லாம் தங்களது சமூகவலைதளத்தில் பகிர பயங்கர வைரலாய் பரவியிருக்கிறது.

நமக்கு நெருக்கமானவர்களின் திருமணத்திற்கு சென்றால் எப்படி உடையணியவேண்டும் என்பதிலிருந்து எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றும் சொல்லியிருக்கிறார் ஆலியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாச்சுலர் பார்ட்டி :

பாச்சுலர் பார்ட்டி :

இங்கே பேச்சுலர் பார்ட்டி எல்லாம் சர்வ சாதரணம். திருமணத்திற்கு முந்தைய நாள் ஆட்டம் பாட்டத்துடன் இந்த விழா கண்டிப்பாக நடந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த நிகழ்ச்சிக்கு ஆலியா ஃப்ளோரல் கவுன் அணிந்திருந்தார்.

மணமகளுடன் சேர்ந்திருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இரண்டு அழகிகளையும் வைத்து எடுக்கப்பட்ட ஃப்ரேம் கூட அவ்வளவு கச்சிதமாக இருந்தது. சிம்பிளான மேக்கபில் வசீகரித்தார் ஆலியா.

மெஹந்தி :

மெஹந்தி :

ப்ரைட் மஞ்சள் நிறத்திலான ஃபுல் ஸ்லீவ் சல்வார் அணிந்திருந்தார். இது ஆலியாவின் நிறத்தை தூக்கிக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக டாங்லிங் தொடு மற்றும் சிறிய கருப்பு நிற பொட்டு அவ்வளவு பொருத்தம்.

சங்கீத் :

சங்கீத் :

சங்கீத் விழாவிற்கு ஆலியா தேர்ந்தெடுத்தது டார்க் நிறத்திலான லெஹங்கா சோலி . இதை அணிந்து கொண்டு க்யூட்டான மணமகள் தோழியாக வலம் வந்தார் ஆலியா.

லெஹங்காவில் சின்ன சின்ன அழகி வேலைப்பாடுகள் க்ரிஸ்டல் நிரம்பியிருக்கிறது.

மணமகள் :

மணமகள் :

திருமணத்திற்கு வந்துவிட்டு மணமகளை பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம். இதோ இப்போது மணமகள் க்ரிபா. ஆலியாவுக்கு சற்றும் சலைத்தவர் அல்ல க்ரிபா. தன்னுடைய திருமண நாளின் மேக்கப் மற்றும் உடையலங்காரம் அவ்வளவு தத்ரூபமாய் தேடித் தேடி செதுக்கியிருந்தார்.

மேட்சிங்கான எம்பிராய்டரி ப்ளவுஸ் மற்றும் அழகிய நகைகள் எல்லாம் அவ்வளவு அற்புதம்.

அகன்ஷா :

அகன்ஷா :

தோழிகள் இருவரைப் பற்றி மட்டும் பேசினால் எப்படி.... இதோ வந்து விட்டார் அகன்ஷா மெஹந்தி சங்கீத் என எல்லா விழாக்களிலும் தனக்கென சிக்னேச்சர் ஸ்டைலை வெளிக்காட்டும் விதமாக அழகான ஆடைகளை அணிந்திருந்தார்.

பேஸ்டல் ஷேட் உடையில் அவ்வளவு அழகு அகன்ஷா.

 ஸ்டைலிஷ் கேர்ல்ஸ் :

ஸ்டைலிஷ் கேர்ல்ஸ் :

ஆலியா அங்கு வந்திருந்த பிற தோழிகள் மற்றும் மணமகளுடன் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார், ஒவ்வொருவரும் கண்ணைப் பறிக்கும் ப்ரைட்டான நிறத்தில் அற்புதமான உடைகளை அணிந்திருந்தார்கள்.

மணமகள் தோழி :

மணமகள் தோழி :

திருமணத்தில் தோழிகள் தானே எல்லா சேட்டைகளை செய்வது வாடிக்கை இதோ மேடையில் ஏறி மைக்கில் ஏதோ பேசுவது போல ஒரு போட்டோ. இதனை இந்த திருமணத்தை போட்டோ பிடித்துக் கொண்டிருந்த வெட்டிங் போட்டோகிராபர் பகிர்ந்திருந்தார்.

தூரத்திலிருந்து சிம்பிள் மேக்கப்பில் லைட் வெளிச்சத்தில் தெரியும் ஆலிய கூட பேரழகு தான்.

செல்ஃபி திருவிழா :

செல்ஃபி திருவிழா :

தோழி க்ரிபாவின் மெஹந்தி விழாவிற்கு மஞ்சள் நிறத்திலான லாங் ஸ்லீவ் லெஹங்கா அணிந்திருந்தார் ஆலியா. அந்த விழாவின் போது தோழியுடன் எடுத்த செல்ஃபி செம்ம..... அதிலும் ஆலியாவின் அக்மார்க் சிரிப்பு

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் :

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் :

சங்கீத் திருவிழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் இருக்கும். இதன் ஒவ்வொரு தருணத்திலும் என்ஜாய் செய்திருக்கிறார் ஆலியா. எவ்வித தயக்கமும் இல்லாமல் மேடையில் ஏறி நடனமாடியா வீடியோ ஆலியாவின் ரசிகர்களிடையே செம்ம வைரலானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வீடியோவைக் காண க்ளிக் செய்யுங்க 

Read more about: fashion, bollywood, wardrobe
English summary

alia bhatt avataras for best friend wedding

alia bhatt avataras for best friend wedding
Subscribe Newsletter