Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
ஜே.ஜே. வலாயாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த இஷா குப்தா!!!
மிகவும் பிரபலமான டிசைனரான ஜே.ஜே. வலாயா, தான் வடிவமைத்த ஆடைகளை இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் ஐந்தாம் நாளில் வெளியிட்டார். இவர் எப்போதும் மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் டிசைன் செய்யும் ஏஸ் ஃபேஷன் டிசைனர் தான் இவர்.
இந்த முறை ஜே.ஜே. வலாயா, பெண்களுக்கு மிகவும் ஸ்டைலான மணப்பெண் ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். மேலும் இவர் நன்கு பளிச்சென்றும், பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலான நிறங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த முறை இவர் ஷோஸ்டாப்பராக இஷா குப்தாவை அழைத்துள்ளார்.

ஷோஸ்டாப்பராக வந்த இஷா குப்தா, இவர் வடிவமைத்த சிவப்பு நிற லெஹெங்காவை அணிந்து ராம்ப் வாக் நடந்தார். மேலும் இவர் அணிந்திருந்த சிவப்பு நிற லெஹெங்காவில் ப்ரில் அதிகம் இருப்பதோடு, அதிகப்படியான கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த லெஹெங்காவின் கீழே பூ மற்றும் இலைகள் வடிவில் நூல் எம்பிராய்டரி செய்யப்பட்டு, ஆங்காங்கு வெல்வெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஷா அணிந்திருந்த லெஹெங்காவின் மேலாடையான 'V' கழுத்து கொண்டு, ப்ளைனாக இருப்பதுடன், பார்டரில் மட்டும் கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜாக்கெட்டின் முனைகளில் சிறு சிறு சிவப்பு நிற முத்துக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த ஆடைக்கு இஷா குப்தா கண்களுக்கு ஸ்மோக்கி மேக் அப்பையும், உதடுகளுக்கு பிங்க் நிற லிப் க்ளாஸ் போட்டிருப்பது, இந்த உடையின் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டுகிறது.



Click it and Unblock the Notifications
