Latest Updates
-
100 மனைவிகளுக்கு மேல் வைத்திருந்த மன்னர்களின் லிஸ்ட் - எந்தெந்த இந்திய ராஜாக்கள் இதில் இருக்கிறார்கள் தெரியுமா -
வீட்டுல முருங்கைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோரையும் மயக்கும் வசீகரம் கொண்டவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் பணவரவு குறையாமல் இருக்கணுமா? மணி பிளாண்ட் வைப்பதில் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீங்க! -
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க.. -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மெனிக்யூர், பெடிக்யூர் என்றால் என்ன? அதை எப்படி வீட்டிலேயே செய்வது...?
தொடர்ச்சியான பணி, குடும்ப வேலை, அடுத்தடுத்து காத்துக்கொண்டிருக்கும் கடமைகள் என ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு, தங்களை பராமரிப்பதற்கென நேரம் ஒதுக்குவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அப்படியே பராமரிப்பை மேற்கொண்டாலும், பெரும்பாலும் அது முகத்திற்கும், கூந்தலுக்கும்தான் செய்கிறார்கள்.. கை, பாதங்களை பராமரிப்பது பற்றி பலரும் நினைப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் அதற்கான பெடிக்யூர் (Pedicure) காஸ்மெடிக் சிகிச்சையை பார்லரிலேயே செய்து கொள்கின்றனர்.
கைகள் உடலின் மிகவும் சுறுசுறுப்பான பாகங்கள் என்பதால், அவை முடிந்தவரை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் கைகளுக்கு வாரம் ஒருமுறை மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்ய வேண்டும்.

மெனிக்யூர்
மெனிக்யூர் (manicure) என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். கை, விரல், நகம் ஒப்பனைக் கலைதான் மெனிக்யூர் என அழைக்கப்படுகிறது. முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டென தெரிவது கைகளும், விரல் நகங்களாகும். இவற்றை பராமரிக்கும் வழிதான் மெனிகியூர்.
பெடிக்யூர்
முகத்தை அழகாக்குவதற்கு மெனக்கெடும் பெண்கள் பலர் தன்னுடைய பாதங்களை மறந்துவிடுகிறீர்கள். ஆம் பித்த வெடிப்பு, கால் நகங்களில் பாதிப்பு என எத்தனை நாள்கள் இருந்தாலும் நம்மில் பலர் அதனைக் கண்டுகொள்வதில்லை. இதுப்போன்றவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதோ உங்களுக்கான செய்தி தான் இது. உங்களது கால்களையும், பாதங்களையும் அழகாக்குவதற்கு நீங்கள் ப்யூட்டி பார்லர் செல்ல வேண்டாம். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூர் நீங்கள் செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களது பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மெனிக்யூர், பெடிக்யூர் செய்வது எப்படி?
1. முதலில் நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை அகற்றவும். இதற்கு கொஞ்சம் காட்டன் எடுத்து நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து, பஞ்சை நகத்தின் மீது வைத்து துடைக்கவும்.
2. பிறகு நகங்களை நன்றாக ட்ரிம் செய்யவும். இந்த நேரத்தில் ஃபைலரை முன்னும் பின்னுமாக வலுக்கட்டாயமாக தேய்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் நகங்களின் ஓரங்கள் வலுவிழந்து விரைவில் உடைந்து விடும்.
3. இரண்டு கைகளின் நகங்களையும் ட்ரிம் செய்த பிறகு, ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் சோப்பு தண்ணீரை ஊற்றி, அதில் ஹைட்ரஜன் பெராக்சைடு, கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, இரண்டு கைகளின் விரல்களையும் பத்து நிமிடம் அதில் மூழ்க வைக்கவும்.
4. இவ்வாறு செய்வதன் மூலம் நகங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிந்து கரடுமுரடான மற்றும் கடினமான வெட்டுக்கால்கள் மென்மையாக மாறும். சுற்றியுள்ள தோலும் மென்மையாகும். அதன் பிறகு, இரண்டு கைகளையும் அகற்றி, ஈரமாகாமல் ஒரு துண்டில் துடைக்கவும்.
5. இதோ போலவே பெடிக்யூர் மூலம் நம்முடைய கால்களையும் சுத்தம் செய்யும் போது முதலில் நாம் நகங்களை சரியாக வெட்ட வேண்டும். பின்னர் நகங்களை ஷார்ப் செய்து நெயில் ரிமூவரின் உதவியுடன் நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை அகற்ற வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிஷ் நீங்கள் உபயோகிக்கலாம்.
6. கால்களில் உள்ள அழுக்குள் மற்றும் தொற்றுகள் நீங்குவதற்கு அவற்றிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதற்காக உங்களது கால்கள் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கலந்து மசாஜ் செய்யலாம். பின்னர் சூடான நீரில் எலும்பிச்சை சாறு கலந்து கால்களை சிறிது நேரம் உள்ளே வைத்து மசாஜ் செய்யும் போது கால்களில் உள்ள அழுக்கள் விரைவாக சுத்தம் செய்யப்படும்.
7. இதையடுத்து உங்களில் கால் விரல்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை துண்டுகளைக் கொண்டு கால்களில் தேய்க்கவும். பின்னர் , 1 டீஸ்பூன் எலுமிச்சை + 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உங்களது பாதங்களை நன்றாக தேய்த்து மென்மையான துண்டினால் துடைக்க வேண்டும். பின்னர் சூடான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதுப்போன்று நீங்கள செய்யும் முறை உங்களது கால்களை மற்றும் பாதங்களை பிற தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதோடு அழகாகவும் மாற்றுகிறது.



Click it and Unblock the Notifications