ஒரு இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா? அப்படி பண்ணா... என்ன நடக்கும் தெரியுமா?

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது, இது உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். இருப்பினும், ஒரு இரவு முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் இருக்க விடுவது அவ்வளவு நல்ல யோசனையாக இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.

அழகான கூந்தலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் பூசுவதுதான் என்று பல பெண்கள் நம்புகிறார்கள். இது உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை மீட்டெடுக்கும் அதே வேளையில், உங்கள் தலைமுடியில் அதிக நேரம் எண்ணெய் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பலர் இரவில் முடிக்கு எண்ணெய் தடவிவிட்டு தூங்கச் செல்ல விரும்புகிறார்கள்.

What Happens If You Leave Oil In Your Hair Overnight In Tamil

ஒரு இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் வைத்திருப்பது முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் மாறும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறானது. ஒரு இரவு முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

முடிக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதன் நன்மைகளைப் புரிந்து கொள்ள, மயிர்க்கால்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். க்யூட்டிகல் என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில் இருந்து பாதுகாப்பை வழங்கும் வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான நன்கு எண்ணெய் தடவப்பட்ட க்யூட்டிகல் மயிர்க்கால்களுக்கு பளபளப்பை அளிக்கிறது.

தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் தடவுவதன் சில நன்மைகள்

  • தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் நிறைந்துள்ளன. எனவே அவை சருமத்தை மிருதுவாக மாற்றவும், அதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
  • பல எண்ணெய்களில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
  • சில எண்ணெய்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • உச்சந்தலையில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஒரு இரவு முழுவதும் முடியில் எண்ணெய் இருந்தால் என்ன நடக்கும்?

குறிப்பாக வறண்ட மற்றும் உதிர்ந்த முடி கொண்ட பெண்கள், ஒரு இரவில் முடிக்கு எண்ணெய் விடுவது சிறந்த தீர்வு என்று நினைக்கலாம். ஆனால், அது தவறு. ஹேர் ஆயில் ஒரு இரவு முழுவதும் தலைமுடியில் தேங்கினால், மயிர்க்கால்களின் திறப்புகளைத் தடுக்கலாம் மற்றும் போமேட் முகப்பரு எனப்படும் ஒரு சிறப்பு வகை முகப்பருவை ஏற்படுத்தலாம். துளைகளை அடைக்கும் பொருட்களைக் கொண்ட முடி தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது இது நிகழ்கிறது.

முடி எண்ணெயை நீண்ட நேரம் வைத்திருப்பது, செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என்ற நிலையை மோசமாக்கலாம், இது செபாசியஸ் சுரப்பிகளின் பூஞ்சை தொற்று ஆகும். இது உச்சந்தலையில், புருவங்களில், காதுகளுக்குப் பின்னால் மற்றும் உங்கள் மூக்கைச் சுற்றி க்ரீஸ் மஞ்சள் நிற செதில்களை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் எண்ணெய் பயன்படுத்துவதால் முகத்தில் நிறமி ஏற்படலாம்.

எனவே, முடி எண்ணெயை ஒரு இரவு முழுவதும் விட்டுவிடுவது நிச்சயமாக நல்லதல்ல என்கிறார் நிபுணர்கள். முடியில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை எண்ணெய் வைத்தால் போதும் என்கிறார்கள் நிபுணர்கள். மேலும், ஹேர் ஆயிலை மெதுவாகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தீவிரமாக செய்யக்கூடாது, அது முடி உடைவதற்கு வழிவகுக்கும்.

சிறந்த முடியை பெற உதவும் எண்ணெய்கள்

நிறைவுற்ற கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய் முடிக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களை செய்யும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் நீங்கள் மற்ற முடி எண்ணெய்களையும் முயற்சி செய்யலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான மூலமாகும். எனவே புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் கட்டமைப்பு சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது உலர்ந்த முடியை மென்மையாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. மேலும் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் வளமான மூலமாகும். இது முடியை மென்மையாக்கும் செயலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது உங்கள் உச்சந்தலையின் உள்ளே ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. மேலும், இது பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

ஆம்லா எண்ணெய்

வைட்டமின் சி நிறைந்த ஆதாரமான ஆம்லா எண்ணெய், ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பால் முடி நரைக்கப்படாமல் பாதுகாக்கிறது. இது ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டையும் கொண்டுள்ளது. உங்கள் முடி உதிர்வதை தடுக்கவும் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் ஆம்லா எண்ணெய் உதவும்.

எள் எண்ணெய்

எள் எண்ணெய் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் புற ஊதா கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இது மயிர்க்கால்களை ஈரப்பதமாக்குகிறது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இது மயிர்க்கால்களுக்குள் ஊடுருவலை மேம்படுத்துகிறது மற்றும் உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்துகிறது.

Desktop Bottom Promotion