Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொளுத்தும் கோடைகாலத்தில் இந்த நிற ஆடைகளை அணிவது உங்களை வெப்பக்கதிர்களில் இருந்து காப்பாற்றுமாம்...!
நாம் அணியும் ஆடைகளின் நிறங்கள் பருவக்காலங்களை சமாளிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோடைகாலத்தில் நாம் சரியான நிற ஆடைகளை அணிவது வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். கோடைகாலத்தில் என்ன நிற ஆடைகளை அணிய வேண்டுமென்பது பலரும் சிந்திக்காத ஒரு விஷயமாகும்.
பொதுவாக இருண்ட மற்றும் அடர் நிறங்கள் அதிக சூரிய ஒளியை கிரகிப்பதால் நம் சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இலேசான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவது வெப்ப கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாப்பை வழங்கும்.

கோடைகாலத்தில் எந்த நிற ஆடைகளை அணிவது நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை
கோடைகாலத்திற்கான சிறந்த நிறங்களில் வெள்ளை எப்போதும் முதலிடத்தில் இருக்கும். பிரகாசமான வெள்ளை, வெளிர் வெள்ளை, வெள்ளை ஷேட்ஸ் என எந்த நிற வெள்ளை ஆடையும் கோடைகாலத்திற்கு சிறந்தது. ஏனெனில் வெள்ளை நிற ஆடைகள் அதிகபட்ச வெப்பத்தை பிரதிபலிக்கும் என்பதால், கொளுத்தும் வெப்பத்தில் உங்களுக்கு ஆறுதலையும், சுவாசத்தையும் தரும்.
பிங்க்
பிங்க் நிற ஆடைகள் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது ஒரு மூடநம்பிக்கை. ஆண்களும் இந்த நிற ஆடைகளை அணிந்து ஸ்டைலான தோற்றத்தை உருவாக்கலாம். இருண்ட மற்றும் வெளிர் நிறம் இரண்டிற்கும் இந்த நிறம் பொருத்தமாக இருக்கும். கோடைகாலத்தில் சூரிய வெப்பத்தில் இருந்து உங்களை திறம்பட பாதுகாக்கும்.
மஞ்சள்
வெயில் காலத்தில் அணிவதற்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மஞ்சள் அதில் முக்கிய இடம்பெறும். அடர்ந்த நிற பேண்ட்களுடன் அணியும் போது இது சிறப்பான தோற்றத்தையும், பாதுகாப்பையும் வழங்கும்.
சிவப்பு
இது அடர்ந்த நிறங்களில் ஒன்றாக கருதபாடலாம் வெயில்காலத்தில் அணிவதற்கு சிறந்த நிறங்களில் ஒன்றாக இருக்கிறது. அடர் நிற சருமம் கொண்டவர்கள் இந்த நிற ஆடை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெளிர் நிற சருமம் உள்ளவர்கள் இந்த நிறத்தை தாராளமாக அணியலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு நிறம் எந்த பருவக்காலத்திலும் அணிவதற்கு சிறந்த நிறமாக இருக்கிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான நிறமாக இருக்கும் இது கோடைகாலத்தின் மோசமான வெப்ப கதிர்வீச்சிலிருந்து உங்களை சருமத்தைப் பாதுகாக்கும்.
பச்சை
வானவில்லின் குளிர்ந்த நிறங்களில் ஒன்றாக இருக்கும் பச்சை கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த நிறங்களில் ஒன்றாகும். எந்தநிற பேண்ட்டுடனும் கச்சிதமாக பொருந்தும் இந்த நிற ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாக இருப்பதுடன் உங்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications


