Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கணுமா? முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்கள்..!
முல்தானி மெட்டி சருமத்தின் அழகை மேம்படுத்தி இயற்கையான தோற்றத்தை தருகிறது.. அது ஒரு அற்புதமான அழகுப் பொருள். இது சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. பலவித குணங்களைக் கொண்ட இந்த முல்தானி மெட்டியை ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும்.. அதனால் தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இது தடுக்கிறது.. இந்த முல்தானி மெட்டி பழங்காலத்திலிருந்தே சரும அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை யூஸ் பண்ணினால் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் இருக்குமாறு பாதுகாக்கிறது... இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. குறிப்பாக முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், காயங்கள் ஆகியவற்றை நீக்கும்.. இப்போது முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி அழகான சருமத்தை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சாறு மற்றும் அரை டீஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து முகத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து கழுவவும். இந்த பேக்கை தடவி வந்தால் அதிகப்படியான எண்ணெய் குறைந்து பளபளப்பான சருமம் கிடைக்கும்.
வெளிர் சருமத்திற்கு
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு விழுது கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த இரண்டு கலவையும் முகத்தில் அதிசயங்களைச் செய்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.
டான் ஆன முகத்திற்கு
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் அரை டேபிள் ஸ்பூன் தேங்காய் தண்ணீர் எடுத்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இது சருமத்திற்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது.
வறண்ட சருமம்
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்து, சம அளவு ஓட்ஸ், தயிர், தேன்... அனைத்தையும் கலக்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால், வறண்ட சருமத்திற்கு சிகிச்சை அளிக்கலாம். சருமத்திற்கு மாய்ஸ்சரைசரை வழங்குகிறது.
பருக்கள் உள்ள முகத்திற்கு
ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, சம அளவு ரோஸ் வாட்டர் மற்றும் வேப்பம்பூ பொடி சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும். இந்த பேக் போட்டால்.. முகப்பரு தழும்புகள் நீங்கி.. சருமம் மிருதுவாகும்.
தோல்
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, தயிர், முட்டையின் வெள்ளைக்கரு சம அளவு எடுத்து.. எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால்.. சருமத்தின் நிறம் அற்புதமாக இருக்கும்.l



Click it and Unblock the Notifications