Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
முகப்பரு தழும்புகளை நீக்கணுமா? இந்த துளசி மற்றும் வேப்பம்பூ ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!
முகப்பரு வடுக்களை சரிச்செய்வது மிகவும் கடினம். பருக்களை எடுக்கவோ அல்லது தொடவோ கூடாது என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. அப்படி செய்வதால்.. பருக்களின் தழும்புகள் என்ன செய்தாலும் போகாது. இருப்பினும் நம் முகத்தில் முகப்பருவால் ஏற்படும் தழும்புகளை நீக்க நாம் பலவிதமான க்ரீம்களை வாங்கி போடுவோம்.
அதனால் சில உபாதைகளும் வரக்கூடும் .. அதனால் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய இந்த துளசி மற்றும் வேப்பம்பூ ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. இந்த துளசி மற்றும் வேப்ப இலைகளை கொண்டு ஃபேஸ் பேக் எப்படி செய்து? முகத்தில் அப்ளை பண்ண வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை பருக்கள் வரும். டீனேஜில் கூட.. குறைந்தபட்சம் முகப்பரு பிரச்சனை இல்லாமல் இருக்காது... பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த பருக்கள் தடுக்கக்கூடியவை. ஆனால்.. அவர்களின் நெற்றியில் உள்ள தழும்புகள் குறையவில்லை. அது கரும்புள்ளியாக மாறி முகத்தின் அழகைக் கெடுக்கும்.
ஆனால் இந்த தழும்புகளை எளிதில் குணப்படுத்த வீட்டிலேயே ஒரு எளிய ஃபேஸ் பேக் உள்ளது. அனைவருக்கும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் செய்யலாம். பலர் இதுபோன்ற வைத்தியங்களை முயற்சிக்காமல் கன்சீலர் மூலம் மூடிவிடுகிறார்கள். ஆனால்.. இப்படி மேக்கப் போட்டு மறைப்பது நல்லதல்ல. அது உங்களுடைய சருமத்தின் மென்மையை கெடுக்கும்.. அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை கொடுக்கும்..அதனால் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை டரை பண்ணுங்கள்..
தேவையான பொருட்கள்
3 துளசி இலைகள்
2 புதினா இலைகள்
2 வேப்ப இலைகள்
1 எலுமிச்சை
1 தேக்கரண்டி மஞ்சள்
தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை
1. முதலில் எலுமிச்சையில் இருந்து சாறு எடுக்கவும். அனைத்து இலைகளையும் மிக்ஸியில் அரைக்கவும். அது ஒரு பேஸ்ட் போல இருக்கும்.. அதில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.. இந்த கலவையை ஒரு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபேஸ் பேக் முற்றிலும் உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.
2. துளசி மற்றும் புதினா இலைகள் குளிர்ச்சியை தரும். சிவப்பை நீக்குகிறது. எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவராக செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகளைத் தடுக்கிறது.
3. மஞ்சளில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைத்து சருமத்தை மிருதுவாக்கும். மஞ்சள் சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும். இந்த ஹோம் மேட் ஃபேஸ் பேக்கை தடவினால்... சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்குவது மட்டுமின்றி... சருமமும் மிருதுவாக இருக்கும்.
4. மேலும் மஞ்சளும் வேப்ப இலைகளும் ஒரு சுத்தமான கிருமி நாசினியாகும்.. அதனால் அதனை ஃபேஸ் பேக்காக செய்து முகத்தில் அப்ளை செய்வது நல்லது..



Click it and Unblock the Notifications
