Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
அடர்ந்த காடு மாதிரி உங்களுக்கு முடி வளரணுமா? அப்ப இந்த உணவுகள கண்டிப்பா சாப்பிடுங்க..!
Hair Growth In Tamil: இன்றைய நாளில் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்காத நபர்களே இல்லை எனலாம். குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை பெரும்பலான மக்கள் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு உணவின் மூலம் நீங்கள் தீர்வு காணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், முடி உதிர்தல் பிரச்சனை உங்களை கவலையடையச் செய்தால், வைட்டமின் பி நிறைந்த உணவின் மூலம் தீர்வு காண முயற்சிக்கவும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவை உட்கொள்வது அவசியம். ஆனால், உணவு மூலம் நீங்கள் ஒரு பிரச்சனை தீர்வைத் தேடுகிறீர்களானால், நீங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வரும்போது, வைட்டமின் பி உங்களுக்கு உதவும். வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி பிரச்சனைகளை சரிசெய்யலாம். வைட்டமின் பி நிறைந்த உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி
உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும் பல வைட்டமின்கள் உள்ளன. ஆனால் முடி வளர்ச்சி மற்றும் நல்ல முடி ஆரோக்கியத்திற்கு குறிப்பாக வைட்டமின் பி தேவைப்படுகிறது. பி7 (பயோட்டின்), ஃபோலேட் மற்றும் பி 12 போன்ற பி வைட்டமின்கள் முடி செல்கள் உட்பட புதிய செல்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பயோட்டின் முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஃபோலேட் மற்றும் பி 12 ஐப் பொறுத்தவரை, அவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் பங்குவகிக்கின்றன. அவை ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை முடியின் வேர்களுக்கு கொண்டு செல்கின்றன, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளை வலிமையாக்குவதற்கு அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், இவற்றில் முடி ஆரோக்கியத்திற்கு அவசியமான பயோட்டினும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
முட்டை
பொதுவாக முட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நீங்கள் அவற்றை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிடலாம். மேலும் முட்டையை மேற்பூச்சாக உங்கள் தலைமுடியில் பயன்படுத்தியும் முட்டையின் நன்மைகளை அறுவடை செய்யலாம். பயோட்டின் உள்ளிட்ட பி வைட்டமின்களின் நல்ல மூலமாக முட்டை உள்ளது. இது முடி வளர்ச்சியையும் வலிமையையும் ஊக்குவிக்கிறது.
இலை பச்சை காய்கறிகள்
கீரை மற்றும் கோஸ் போன்ற காய்கறிகளில் ஃபோலேட் நிறைந்திருப்பதால், முடியின் வலிமையை பராமரிக்க உதவுகிறது. மேலும், உங்கள் அன்றாட உணவுகளில் பச்சை இலை காய்கறிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
மீன்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் பி12 -வும் அதிகளவில் உள்ளது. இவை முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்
பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவை முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஃபோலேட் உட்பட பி வைட்டமின்களை உங்களுக்கு வழங்குகின்றன. அத்துடன் பல ஆரோக்கியமான நட்ஸ்கள் மற்றும் விதைகளையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முடி வளர்ச்சிக்கு பாதாம் அல்லது சூரியகாந்தி விதைகளை சாப்பிடுங்கள். அவை பயோட்டின் மற்றும் பிற பி வைட்டமின்கள் நிறைந்தவை.
முழு தானியங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
பிரவுன் ரைஸ் மற்றும் ஓட்ஸ் ஆகியவை முடியை வலுவாக்கும் பி வைட்டமின்களைக் கொண்டிருப்பதால் அவை நல்ல உணவு விருப்பங்கள். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது முடி ஆரோக்கியத்திற்கும் பி வைட்டமின்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
இறுதிக்குறிப்பு
இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். காலை உணவின் ஒரு பகுதியாக நீங்கள் பால் அல்லது பால் பொருட்களை உட்கொள்ளலாம் அல்லது அவற்றை ஸ்மூத்திகளில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டையை காலை உணவாக உண்ணலாம் அல்லது சாலடுகள் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
பச்சை இலை காய்கறிகள், மீன், பருப்பு வகைகள், நட்ஸ்கள் மற்றும் விதைகளை சாலட்கள், ஸ்டிர்-ஃப்ரைஸ் அல்லது பல்வேறு உணவுகளுக்கான டாப்பிங்ஸ்களில் சேர்க்கலாம். முழு தானியங்களை உணவின் ஒரு பகுதியாகவோ அல்லது பக்க உணவுகளாகவோ உட்கொள்ளலாம். சிட்ரஸ் பழங்களைப் பொறுத்தவரை, அவற்றை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாலடுகள் அல்லது பழச்சாறுகளில் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
