Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஆண்களே! வெயிலால் உங்க முகம் கருப்பாகுதா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
Face Packs For Men In Tamil: கோடை வெயிலில் சுற்றி நிறைய பேரின் முகம் கருமையாகியிருக்கும். அதுவும் பெண்களை விட ஆண்களின் முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும். இப்படி வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். பெண்கள் இதை சரியாக செய்து வருவார்கள். ஆனால் ஆண்கள் தங்களின் சருமத்தின் மீது குறைவாகவே கவனம் செலுத்துகிறார்கள்.
அதுவும் சருமத்தில் பிரச்சனை வந்த பின்னர் தான் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க நினைப்பார்கள். எனவே ஆண்களே இதுவரை நீங்கள் உங்கள் சருமத்திற்கு எந்த ஒரு பராமரிப்பையும் கொடுக்காமல் இருந்தால் இனிமேலும் அப்படி இருக்காதீர்கள். நீங்கள் அழகாக இருக்க வேண்டுமானால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

அதுவும் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சருமம் சேதமடையாமல் இருக்க வேண்டுமானால், கட்டாயம் சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பைக் கொடுக்காமல், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால் போதுமானது.
பொதுவாக ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்தை விட கடினமாக இருக்கும். இந்நிலையில் ஆண்கள் தங்களின் சருமத்திற்கு ஏற்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பை கொடுக்க வேண்டும். கீழே ஆண்களின் சரும அழகை மேம்படுத்த மற்றும் அவர்களின் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
1. ஆரஞ்சு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை ஆண்கள் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
2. தயிர், கற்றாழை மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கடலை மாவு மற்றும் கரும்பு ஜூஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கரும்பு ஜூஸ் மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, முகம் வெள்ளையாவதைக் காணலாம்.
4. வேப்பிலை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வேப்பிலை பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், பிம்பிள் மறையும்.
5. வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
6. முல்தானி மெட்டி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது முல்தானி மெட்டி பொடியை எடுத்து, சிறிது தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வர, முகம் பிரகாசமாக இருக்கும்.
7. வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சிறிது எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு அதை குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.
8. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
