Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வெயிலால் சருமம் சேதமடையாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் டைம்-ல போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் காலத்தில் எப்படி உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமோ, அதேப் போல் சருமத்தையும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு சருமத்திற்கு வழக்கத்தை விட கூடுதல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்திற்கு ஏற்ற சரியான பராமரிப்பு என்றால் அது ஃபேஸ் பேக்குகளைப் போடுவது தான்.
அதுவும் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போடுவதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது, சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமம் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். கீழே கோடைக்காலத்தில் சரும செல்கள் சேதமடையாமல் ஆரோக்கியமாக இருக்க போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் பாதி வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்தது கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ளதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கி குளிர்விக்க உதவுகிறது. அதே நேரத்தில் கற்றாழை சருமத்தை ஆற்றவும், தீக்காயங்கள் அல்லது வீக்கத்தைப் போக்கவும் உதவுகிறது.
2. பப்பாளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு நன்கு பழுத்த பப்பாளியை சிறிது எடுத்து மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள பப்பாளி இறந்த சரும செல்களை வெளியேற்றி, சரும மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள எலுமிச்சை சருமத்தை பிரகாசமாக்கி, சருமத்தை சமன் செய்கிறது.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு 2 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது சருமத்தை பிரகாசமாக்கி, சூரிய ஒளியை நீக்குகிறது, அதே நேரத்தில் தேன் சருமத்தை ஈரப்பதமாக்கி, மென்மையாக்குகிறது.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது எரிச்சலூட்டும் சருமத்திற்கு உதவுகிறது மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்தை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது.
5. எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 எலுமிச்சையின் சாற்றினை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள எலுமிச்சை சருமத்தை பிரகாசமாக்கி, சருமத்தை தெளிவாக்குகிறது. அதே நேரத்தில் தேனில் அற்புதமான ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. மேலும் இது சருமத்தை ஆற்றவும் உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications