Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
உங்க முகம் எப்பவும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Face Packs For Oily Skin In Tamil: உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து, டல்லாகவும், எண்ணெய் வழிந்தவாறும் இருக்கிறதா? அப்படியானால் உங்கள் சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இப்படி சருமத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தாமல், பின் முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை போடுவதை விட, நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எண்ணெய் பசையும் கட்டுப்படும், முகமும் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.

கீழே முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு எது ஈஸியோ அதைத் தேர்ந்தெடுத்து அடிக்கடி பயன்படுத்தி வாருங்கள்.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு, சருமத்திற்கு ஒருவித பிரகாசத்தை அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
3. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. தக்காளி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1 முறை பயன்படுத்தி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வருவது நல்ல மாற்றத்தைக் காட்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
