பெர்ம்யூம் ரொம்ப பிடிக்குமா? உங்களுக்கு ஏற்ற பெர்ம்யூம்மை எப்படி தேர்ந்தெடுப்பது?

வாசனை திரவியத்தை பொறுத்தவரை எல்லாருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள் இருக்கும். தற்போது வாசனை திரவியங்களில் ஏராளமான ப்ளேவர்கள் வருகின்றன. எனவே மக்கள் அதை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இருப்பினும் ஒவ்வொருவரின் ஆளுமை, உடை மற்றும் ஸ்டைலுக்கு தகுந்தாற் போல் வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற் போலும் வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

Tips For Finding The Right Perfume In Tamil

உங்களை ஆடம்பரமாக காட்டுவதில் வாசனை திரவியங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல வாசனை திரவியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

வாசனை திரவியத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

முதலில் வாசனை திரவியத்தின் வகையை தேர்ந்தெடுங்கள்

* முதலில் உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தின் வகையை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பிடித்த மலர் வாசனை அல்லது அத்தியாவசிய எண்ணெய் இவற்றில் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வாசனை திரவியங்களில் ஏகப்பட்ட வகைகள் வருகின்றன.

* மலர் வாசனை திரவியங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பாக பெண்கள் இந்த மலர் வாசனை திரவியத்தை தேர்ந்தெடுக்கின்றனர். உங்களுக்கு பிடித்த ரோஜா, மல்லிகை, சிட்ரஸ் மணம் வீசும் வாசனை திரவியங்கள் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

* இது தவிர சிட்ரஸ் முதல் பெர்ரி வரை ஏராளமான பழ வாசனைங்கள் காணப்படுகின்றன. இவைகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

* அதிநவீன வாசனைக்காக மர வாசனையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதில் சிடார் மற்றும் சந்தன மர வாசனைகள் கிடைக்கின்றன.

* உங்களுக்கு தனித்துவமான வாசனை தேவை என்றால் ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இப்படி உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தின் வகையை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேவையான பொருட்களை சரிபார்க்க வேண்டும்

அடுத்ததாக வாசனை திரவியங்களை வாங்கும் போது அதில் எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்பட்டுள்ள சில நறுமணப் பொருட்களால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு சென்ஸ்டிவ் சருமம் இருக்கும் அவர்கள் கெமிக்கல் பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் அடங்கிய வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இயற்கையான பொருட்கள் உங்கள் சருமத்தை மென்மையாக உணர வைக்கும்.

வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் வெவ்வேறு வாசனைகளை ஆராயுங்கள்

எப்பொழுதும் ஒரே பிராண்ட் மற்றும் ஒரே வாசனையை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் வெவ்வேறு வாசனைகளை தேர்ந்தெடுங்கள். புதிய வாசனைகளை அவ்வப்போது தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பங்களை வித்தியாசமாக உணர வைக்கும். வாசனை திரவியங்களை வாங்குவதற்கு முன்பு அதை லேசாக சருமத்தில் அடித்து பார்த்து சோதனை செய்வது அவசியம். உங்களுக்கு ஏதாவது அழற்சி ஏற்பட்டால் அந்த வாசனை திரவியத்தை வாங்காதீர்கள்.

EDT மற்றும் EDP வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்கும் போது EDT மற்றும் EDP என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலான வாசனை திரவியங்களில் இதை எழுதி இருப்பார்கள். Eau De Parfume என்பது பொதுவாக ஒரே வாசனை நீண்ட காலம் நீடிக்கும் என்பதன் பொருளாகும். Eau De Toilette என்பது குறைந்த நேரம் நீடிக்கும் பெர்ம்யூம் ஆகும். இதை அடிப்படையாக கொண்டு உங்கள் வாசனை திரவியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

வாசனை திரவியத்தை சரியாக தேர்ந்தெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

* வாசனை திரவியத்தை சரியாக தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தும் போது அது உங்கள் மனநிலையையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வைக்கிறது.
* ஒரு இனிமையான நறுமணம் உங்களை கவர்ச்சிகரமானதாக மாற்றும். உங்களுக்கு நீடித்த உணர்வை ஏற்படுத்தும்.
* சரியான வாசனை திரவியம் உங்கள் உடல் துர்நாற்றத்தை மறைக்க உதவுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
* நெருக்கம் மற்றும் காதல் உணர்வை உருவாக்க வாசனை திரவியங்கள் உதவுகின்றன.
* சரியான வாசனை திரவம் உங்களை ஸ்டைலிஷாக உணர வைக்கும்.

எனவே வாசனை திரவியம் என்பது அடுத்தவர்களை ஈர்க்க மட்டுமல்ல உங்களுடைய ஆளுமையை மேம்படுத்தவும் என்பதை உணர்ந்து கொண்டு சரியான ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

எந்த வாசனை திரவியத்தை எப்போது பயன்படுத்த வேண்டும்?

நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாசனை திரவியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் கோடை கால சுற்றுலாவிற்கு செல்கிறீர்கள் என்றால் மலர் வாசனை கொண்ட வாசனை திரவியங்கள் சரியாக இருக்கும். இதுவே நீங்கள் இரவு பார்ட்டிக்கு செல்கிறீர்கள் என்றால் மஸ்கி பெர்ம்யூம் சரியான ஒன்றாக இருக்கும்.

வாசனை திரவியத்தை பயன்படுத்த சரியான இடம் உங்கள் மணிக்கட்டுகள் தான். நம்மில் பெரும்பாலான நபர்கள் வாசனை திரவியத்தை அக்குள் பகுதியில் மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் வாசனை திரவியம் நீண்ட நேரம் நிலைத்திருக்க அதை மணிக்கட்டுகளில் அடிக்க வேண்டும். ஏனெனில் அப்பகுதி வெப்பமடைந்து இயற்கையான வாசனையை வெளிப்படுத்துகிறது.

எனவே வாசனை திரவியத்தை அடிக்க சரியான இடமாக மணிக்கட்டுகள், காதுகளுக்கு பின்னால், முழங்கை வளைவுகள், கணுக்கால்கள் இவற்றில் அடிக்க வேண்டும். வாசனை திரவியம் நீண்ட காலம் நீடிக்க, ஆடை அணிவதற்கு முன்பு இந்த பகுதிகளில் அதைப் பயன்படுத்துவது நல்லது.

வாசனை திரவியத்தை அதிகமாக பயன்படுத்துவதற்கு பதிலாக குறைவாக பயன்படுத்துங்கள். அது தான் உங்களுக்கு ஏற்ற நறுமணத்தை கொடுக்கும். எனவே வாசனை திரவியம் என்பது வெறும் நறுமணப் பொருள் மட்டுமல்ல. அது உங்கள் பர்னாசிலிட்டி, ஸ்டைல் மற்றும் இமேஜை பிரதிபலிக்கிறது.

Story first published: Sunday, June 18, 2023, 15:00 [IST]
Desktop Bottom Promotion