Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த மாம்பழ ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. மாம்பழ சீசன் தொடங்கிவிட்ட நிலையில், மாம்பழங்கள் விலைக் குறைவில் கிடைக்க தொடங்கியிருக்கும். பழங்களின் ராஜாவாக கருதப்படும் மாம்பழத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் அந்த மாம்பழம் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு சரும நிறத்தை அதிகரிக்கலாம் என்பது தெரியுமா?
தற்போது வெயில் அதிகம் இருப்பதால், பலரது முகம் கருப்பாக மாறியிருக்கும். இப்படி கருப்பாக மாறியுள்ள சருமம் மீண்டும் பழைய நிறத்தைப் பெற வேண்டுமானால், சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை தவறாமல் வழங்க வேண்டும். சரும நிறத்தை மேம்படுத்த ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் மாம்பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

கீழே சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ஒருசில ஈஸியான மாம்பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ, அவற்றைக் கொண்டு உங்கள் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து, கோடைக்காலத்தில் அழகாக ஜொலியுங்கள்.
1. மாம்பழ ஃபேஸ் பேக்
* முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தின் தசைப் பகுதியை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த மாம்பழ ஃபேஸ் பேக்கை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சரும நிறம் மேம்படும்.
* குறிப்பாக இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. மாம்பழம் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் மாம்பழ கூழை சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் கடலை மாவு, சிறிது பாதாம் பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
3. மாம்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* நன்கு கனிந்த மாம்பழத்தின் தசைப் பகுதியை ஒரு பௌலில் எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், சரும நிறம் மேம்படும்.
4. மாம்பழம் மற்றும் முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது மாம்பழக்கூழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி உலர்த்தி விட்டு, தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் சோப்பை பயன்படுத்திவிடாதீர்கள்.
5. மாம்பழம், தயிர் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு, முதலில் ஒரு பௌலில் 2-3 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் மாய்ஸ்சுரைசரைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications

