Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
Summer Skin Care Tips: உங்க முகத்தில் எப்பவும் அசிங்கமா எண்ணெய் வழியுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக ஏற்படும் வியர்வையினால், பலரது முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும். உங்கள் முகமும் எப்போதும் எண்ணெய் பசையுடன் பிசுபிசுக்காகவும், பொலிவிழந்தும் இருக்கிறதா?
அப்படியானால் உங்கள் முகத்திற்கு ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். இப்படி போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, முகத்தில் வரும் முகப்பருக்களும் தடுக்கப்படும்.

என்ன தான் கடைகளில் ஆயிரம் ஃபேஸ் பேக்குகள் விற்கப்பட்டாலும், இயற்கை பொருட்களைக் கொண்டு போடப்படும் ஃபேஸ் பேக்குகளைப் போன்று பலன் கிடைக்காது. கீழே முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்ட உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே, கோடையிலும் முகம் எப்போதும் பளிச்சென்று அழகாக இருக்கும்.
கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி கோடைக்காலத்தில் போட்டு வந்தால், சரும கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
தக்காளி மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்
ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 1/2 கப் தக்காளி ஜூஸ் சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எண்ணெய் பசையால் வரும் முகப்பருக்களைத் தடுக்கும்.
முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத் துளைகளில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, முகத்தை பிரகாசமாகவும், பளிச்சென்றும் வெளிக்காட்டும்.
புதினா ஃபேஸ் பேக்
நல்ல மணத்தைக் கொண்ட புதினா இலைகளை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த வகையான ஃபேஸ் பேக் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, உடனடி பொலிவைத் தரும். மேலும் இது சருமத் துளைகளில் உள்ள கிருமிகளை அழித்து, பருக்களைத் தடுக்கும்.
தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள எலுமிச்சை மற்றும் தயிர் முகப்பருக்களைக் குறைப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி அரைத்து பொடி செய்து, அந்த ஆரஞ்சு பொடியை சிறிது எடுத்து, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களைப் போக்குவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications



