Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து காணப்படுகிறதா? இந்த ஃபேஸ் மாஸ்க்கை அடிக்கடி நைட் போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருமே எப்போதும் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்க விரும்புவோம். ஆனால் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், பெரும்பாலானோரின் முகம் எண்ணெய் வழிந்து அசிங்கமாக காணப்படும்.
உங்கள் முகமும் இப்படி எண்ணெய் வழிந்து காணப்படுகிறதா, அப்படியானால் முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள்.

தற்போது மார்கெட்டுகளில் கெமிக்கல் கலந்த பலவிதமான ஃபேஸ் மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த கெமிக்கல் கலந்த ஃபேஸ் மாஸ்க்குகளை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்தினால், அது சரும செல்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, விரைவில் சருமத்தை முதுமையடையச் செய்துவிடும்.
அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டால், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சருமம் பொலிவோடு இருப்பதோடு, முகத்தில் வழியும் எண்ணெய் பசையும் கட்டுப்படும்.
இப்போது முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் சில ஃபேஸ் மாஸ்க்குகளைக் காண்போம். அவற்றை அடிக்கடி பயன்படுத்தினால், முகத்தில் எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தலாம்.
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 3 துளிகள் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் தயாரித்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்படுவதோடு, எண்ணெய் உற்பத்தியும் கட்டுப்படும்.
அவகேடோ ஃபேஸ் மாஸ்க்
அவகேடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தை பாதி எடுத்து, அதன் தசைப்பகுதியை மட்டும் எடுத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தட்வி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் பளிச்சென்று பொலிவாக இருக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர் மாஸ்க்
24 மணிநேரமும் உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் பஞ்சுருண்டையை எடுத்து ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும்.
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
ஒரு தக்காளியை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த தக்காளியை வடிகட்டி, அதில் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டையை பயன்படுத்தி இதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
