Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
பொடுகு தொல்லைக்கு குட்-பை சொல்லும் நேச்சுரல் ஹேர் பேக்கை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
Summer Dandruff Home Remedies In Tamil: கோடைக்காலம் என்பதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் தற்போது தலைமுடி குறித்த கவலை நிறைய பேருக்கு உள்ளது. ஏனெனில் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையாலும், உணவுப் பழக்கத்தாலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், தலையில் கையை வைத்தாலே கொத்தாக முடி கொட்டுகிறது.

இந்நிலையில் கோடையில் கொளுத்தும் வெயிலினால், அதிகமாக வியர்த்து, அதன் விளைவாக சருமத்துளைகளில் அடைப்புகள் ஏற்படுவதோடு, பொடுகுத் தொல்லை, உச்சந்தலை அரிப்பு போன்றவற்றையும் சந்திக்க நேரிடுகிறது. இப்படி தலையில் வரும் பொடுகை உடனே கவனித்து அதை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் அதன் காரணமாகவும் தலைமுடி பலவீனமாகி உதிரத் தொடங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் தலையில் பொடுகு இருந்தால், எந்நேரமும் தலையை சொறிதவாறு இருக்க நேரிடும். இதன் விளைவாக அது ஒருவரது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.
உங்களுக்கும் இப்படி தலையில் பொடுகு உள்ளதா? அந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட எத்தனையோ ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை ட்ரை செய்யுங்கள். அதுவும் மதுரையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான டாக்டர். சந்தோஷிமா கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் பொடுகை போக்கும் ஒரு அற்புதமான கை வைத்தியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த நேச்சுரல் ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து, அதனால் ஏற்படும் அரிப்பில் இருந்தும் விடுபடலாம் என்று டாக்டர் கூறினார். அந்த ஹேர் பேக் பின்வருமாறு:
தேவையான பொருட்கள்:
* வெந்தயம் - 1/2 கைப்பிடி
* தேங்காய் - 2 சில்லு
* வேப்பிலை - 10
* செம்பருத்தி இலை - 5
நன்மைகள்:
* வெந்தயம் - இந்த ஹேர் பேக்கில் உள்ள வெந்தயத்தில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் நுண்ணுயிரெதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், பொடுகிற்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகத் திகழ்கின்றன. அதுவும் இதில் உள்ள புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் அமிலம் முடியைப் பலப்படுத்துவதுடன், முடி உதிர்வதைக் குறைக்கிறது.
* தேங்காய் - பொடுகை போக்குவதில் மிகவும் பிரபலமான ஒரு பொருள் தான் தேங்காய்/தேங்காய் எண்ணெய். ஏனெனில் இதில் ஈரப்பதமூட்டும் பண்புகளுடன், அதிக செறிவில் உள்ள லாரிக் அமிலம் உள்ளது. இது நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மைகளைக் கொண்டது. எனவே தேங்காயை தலைக்கு பயன்படுத்தும் போது பொடுகில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* வேப்பிலை - வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், இது பொடுகைப் போக்கும் அற்புதமான பொருளாகும். இந்த வேப்பிலையை தலைக்கு பயன்படுத்தும் போது, அது பூஞ்சையால் ஏற்படும் அரிப்பை குறைக்கும்.
* செம்பருத்தி இலை - செம்பருத்தியின் இலை மற்றும் பூக்கள் ஆகிய இரண்டுமே பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளால் நிறைந்தவை. எனவே இவற்றை தலைக்கு பயன்படுத்தும் போது, ஸ்கால்ப்பில் pH அளவு சமநிலைப்படுத்தப்படுவதோடு, எண்ணெய் பசையும் குறையும்.
பயன்படுத்தும் முறை:
* முதலில் இரவு தூங்கும் முன் 1/2 கைப்பிடி வெந்தயத்தை, 1 கப் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் நறுக்கிய தேங்காய், 10 வேப்பிலை மற்றும் 5 செம்பருத்தி இலைகளை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பேஸ்ட்டை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும்.
* பிறகு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
இந்த நேச்சுரல் ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். இப்படி தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடுவதோடு, பொடுகினால் ஏற்படும் அரிப்பும் அடங்கும் என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

