Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க தலையில பொடுகு அதிகமா இருக்கா? அப்ப ஆப்பிள் சீடர் வினிகரை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க..
ஆப்பிள் சீடர் வினிகரால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, அது பொடுகு தொல்லையில் இருந்து விடுவிப்பதோடு, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Apple Cider Vinegar For Dandruff: உலகில் 50 சதவீத இளம் வயதினர் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என்பது தெரியுமா? அதுவும் இந்த பொடுகு தொல்லையால் ஆண்களை விட பெண்கள் அதிகம் அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு அரிப்பை ஏற்படுத்தும் பொடுகு பிரச்சனையானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். தலையில் பொடுகு இருந்தால், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியானது எலிவால் போன்று மாறுவதோடு, முடி வலுவிழந்து ஆரோக்கியமற்று இருக்கும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட பல்வேறு இயற்கை பொருட்கள் உதவி புரியும். குறிப்பாக நமது சமையலறையிலேயே பொடுகு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்பிள் சீடர் வினிகர். இந்த ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தொற்றுக்களை எதிர்க்கும் பண்புகள், அசிட்டிக் பண்புகள் மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஆப்பிள் சீடர் வினிகரால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, அது பொடுகு தொல்லையில் இருந்து விடுவிப்பதோடு, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இப்போது பொடுகைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீர்
ஆப்பிள் சீடர் வினிகரில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால், அதை அப்படியே நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால் ஸ்கால்ப் தான் பாதிக்கப்படும். தலையில் பொடுகு அதிகம் இருக்கும் போது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றைக் கொண்டு தலைமுடியை, குறிப்பாக ஸ்கால்ப்பை அலச வேண்டும். அலசிய பின் 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பொடுகு காணாமல் போகும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஸ்ப்ரே
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில் 2 டேபிள் ஸ்பூன் நீரை சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பின் தலைக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்திய பின், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஸ்ப்ரே செய்து, உலர்த்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய பொடுகு பிரச்சனையே வராது.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் டீ-ட்ரீ ஆயில்
ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்நீரை ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்றாழை ஜெல்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் 5-6 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்ய பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சீமைச்சாமந்தி டீ
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான சீமைச்சாமந்தி டீயில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின் இந்த நீரையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். பொடுகு இருக்கும் போது இப்படி தலைமுடியை வாரம் ஒருமுறை அலச பொடுகு சீக்கிரம் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஆஸ்பிரின்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின் இதைக் கொண்டு தலைமுடியை அலசி, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். அதன் பின் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை
1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் நீரில் கலந்து, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த நீரை தலைமுடியில் ஸ்ப்ரே செய்து, ஒரு துணியால் தலைமுடியைக் கட்டி, 30 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கும் போது, வாரத்திற்கு 2 முறை செய்தால் பொடுகு சீக்கிரம் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.



Click it and Unblock the Notifications