Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
கொரிய பெண்கள் போல கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமத்தை பெற இந்த பொருட்கள நீங்க யூஸ் பண்ணா போதுமாம்!
போராடுகிறது. தேனடையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் பிரகாசிக்க வைக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில், அழகு என்பது நம் தோற்றம் மற்றும் தன்னம்பிக்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அழகாக ஜொலிக்க நாம் பல்வேறு செயற்கை தயாரிப்புகளை பின்பற்றுகிறோம். அது நம் சருமத்தில் பக்கவிளைவை தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது. பொதுவாக அழகான மக்கள் என்றாலே, அவர்கள் கொரிய மக்கள்தான். உலகம் முழுவதும் கொரிய தோல் பராமரிப்பு முறைகளைதான் பலர் பின்பற்றி வருகிறார்கள். உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய அனைத்து தோல் பராமரிப்பு முறைகளையும் கொரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

தோல் பராமரிப்பு உலகில் அவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இயற்கையான தயாரிப்புகளால் இயற்கையாகவே ஜொலிக்கும் சருமத்தை பெறலாம். கொரிய மக்கள் கண்ணாடி தோலை பெற உதவும் சருமப் பராமரிப்பை உருவாக்க சிறந்த தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். சர்வேத மகளிர் தினத்தில் கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற உதவும் கொரிய தோல் பராமரிப்பு ரகசியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கே-பியூட்டி தோல் பராமரிப்பு பொருட்கள்
கொரிய தோல் பராமரிப்பு என்பது விலையுயர்ந்த பொருட்களைப் பற்றியது அல்ல, ஆனால் சரியான நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதாகும். கொரிய தோல் பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அரிசி நீர், ஜின்ஸெங் மற்றும் நத்தை சார்ந்த தயாரிப்புகளை உள்ளடக்கிய தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால் சில தயாரிப்புகளும் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

காய்ந்த தேனடை
நம்பமுடியாத பல நன்மைகளை தரும் காய்ந்த தேனடை பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு சக்திவாய்ந்த ஃபோட்டோடேமேஜ் ஃபைட்டராக மாற்றும் பல நன்மைகள் உள்ளன. இது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் முகப்பரு, மந்தமான தன்மை மற்றும் உணர்திறன் ஆகியவற்றைத் தடுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகிறது. தேனடையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் பிரகாசிக்க வைக்கிறது. மந்தமான மற்றும் சோர்வான சருமத்தை புத்துயிர் பெற இது ஒரு சிறந்த பொருளாக இருக்கும்.

அதிமதுர வேர்
முகத்தில் உள்ள கருமையான திட்டுகளைப் போக்க உதவும் பொருட்களை நீங்கள் தேடுகிறீர்களா? ஆம் எனில், அதிமதுரம் உங்களுக்கானது. அதிமதுர வேர் கரும்புள்ளிகளைத் தடுக்கவும், உங்கள் சருமத்தை பொலிவாக்கவும் உதவும். அதிமதுரம் வேரில் உள்ள வைட்டமின் சி, ரெட்டினாய்டு மற்றும் நியாசினமைடுகளின் அதிக உள்ளடக்கம் சருமத்தை உள்ளிருந்து பிரகாசிக்க வைக்கிறது. இதை சன்ஸ்கிரீனுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம் மற்றும் சருமம் கருமையாவதைத் தடுக்க உதவுகிறது.

ட்ரெமெல்லா காளான்
ட்ரெமெல்லா காளான் ஒரு சூப்பர் ஹைட்ரேட்டர் ஆகும். இந்த உண்ணக்கூடிய காளான் உங்கள் சருமத்தை மேம்படுத்துவதிலும், வயதான அறிகுறிகளைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ட்ரெமெல்லா காளான் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிவைரல்களைக் கொண்டுள்ளது. இது உணர்திறன் வாய்ந்த முகப்பரு மற்றும் வறட்சி பிரச்சனையை சந்திக்கும் சருமத்திற்கு சரியான தேர்வாக அமைகிறது.

செள செள
செள செளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மந்தமான மற்றும் உயிரற்ற சருமம் உள்ளவர்களுக்கு இது அதிசயங்களைச் செய்யும். உங்கள் சருமத்திற்கு புத்துயிர் பெற வைக்க செளசெள உதவும். பாரம்பரிய வைட்டமின் சி தயாரிப்புகளை விட செள செள உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.

வல்லாரைக்கீரை
வல்லாரைக்கீரை அல்லது ஆசிய பென்னிவார்ட் என்றும் அழைக்கப்படும் இந்த கொரிய மந்திர மூலப்பொருளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வயதான அறிகுறிகளை மெதுவாக்க உதவுகிறது. முகத்தில் உள்ள வடுவை குறைக்க உதவுகிறது. மேலும் சரும செல்கள் பழுதுபார்ப்பதை துரிதப்படுத்துகிறது. மேலும் சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.

இறுதிக்குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை இயற்கையான பொருட்கள் என்றாலும், அவற்றை உங்கள் சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. மேலும், இந்த பொருட்கள் உங்கள் சருமத்திற்கு நல்லதா? இல்லையா? என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.



Click it and Unblock the Notifications