Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஏன் தினமும் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?
பலரும் மாய்ஸ்சுரைசரை சரும வறட்சியைப் போக்க மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மாய்ஸ்சுரைசர் சருமத்தில் பல செயல்பாடுகளை செய்கிறது.
இன்று பலரது தினசரி சரும பராமரிப்பு பொருட்களுள் ஒன்று தான் மாய்ஸ்சுரைசர். பலரும் மாய்ஸ்சுரைசரை சரும வறட்சியைப் போக்க மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மாய்ஸ்சுரைசர் சருமத்தில் பல செயல்பாடுகளை செய்கிறது. மாய்ஸ்சுரைசரை சருமத்தில் தடவும் போது, அது சருமத்தில் ஒரு மெல்லிய லேயரை உருவாக்கி, சருமத்தை நச்சுக்கள், மாசுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

குறிப்பாக குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் சுடுநீரில் தான் குளிப்போம். அப்போது சுடுநீரானது நல்ல இதமான உணர்வைத் தந்தாலும், சருமத்தை வறட்சியடையச் செய்யும். எனவே தான் குளித்து முடித்து, சருமத்தை உலர்த்தியதும், மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துமாறு கூறுகிறார்கள். மேலும் இரவு தூங்குவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது நல்லது. இப்போது ஏன் தினமும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும் மற்றும் இது ஏன் குளிர்காலத்தில் மிகவும் இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

முகப்பருக்களை கட்டுப்படுத்தும்
சருமத்தில் எண்ணெய் அதிகம் உற்பத்தியாகும் போது, அது சருமத்தில் பருக்கள் வர தொடங்கும். அதுவும் சருமத் துளைகள் திறந்திருக்கும் போது நச்சுக்கள் மற்றும் தூசிகளை உறிஞ்சி, சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி பருக்களை உருவாக்கும். ஆனால் மாய்ஸ்சுரைசரை சருமத்தில் தடவும் போது, அது சருமத்தில் ஒரு பாதுகாப்பான லேயரை உருவாக்கி, பருக்களை வருவதைத் தடுக்கிறது.

சுருக்கங்கள் மற்றும் முதுமையைத் தடுக்கும்
மாய்ஸ்சுரைசர் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, சருமத்தை உறுதியாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்கிறது. மேலும் சருமத்திற்கு தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தும் போது, சருமத்தில் தோன்றும் முதுமைக் கோடுகள் தடுக்கப்படுகிறது. எனவே உங்கள் சருமம் நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க வேண்டுமானால், தினமும் தவறாமல் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

சரும கறைகளைக் குறைக்கும்
பெரும்பாலானோர் தங்கள் முகத்தில் திடீரென்று கருமையான கறைகளைக் காணலாம். இந்த கறைகள் உங்கள் சருமத்தில் வரக்கூடாது என்று நினைத்தால், சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அதற்கு தினமும் நல்ல தரமான மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

பொலிவான சருமத்தைப் பெற உதவும்
மாய்ஸ்சுரைசரின் முதன்மையான பணி சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்வது தான். மேலும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் போது, அது சருமத்தை நல்ல ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தில் ஈரப்பதம் போதுமான அளவில் இருந்தால், அது சருமத்தை எப்போதும் பொலிவாக வெளிக்காட்டும்.

அலர்ஜியை தடுக்கிறது
ஆய்வுகளின் படி, மாய்ஸ்சுசைர்கள் சருமத்தில் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது மற்றும் சரும நோய்களான சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக உள்ளது.



Click it and Unblock the Notifications
