உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க

புருவங்களைச் சரி செய்வதற்கும் அடர்த்தியாக வளர வைப்பதற்கும் சந்தைகளில் விலையுயர்ந்த பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றை விடச் சிறந்த ஒன்றாக உங்களுக்கு இந்த எண்ணெய்கள் உதவும். நீங்கள் இயற்கையாக உங்க

புருவங்கள் தான் உங்கள் முகத்தின் அழகைச் சொல்லும் ஒரு வெளிப்பாடாகும். அப்படியென்றால் அந்த புருவங்கள் மிக அடர்த்தியாக மற்றும் கருமையாக இருந்தால் தான் முகத்தின் அழகு வெளிப்படும். அதாவது எல்லாரும் தங்கள் புருவங்கள் ஆர்ச் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். எனவே உங்கள் புருவங்களை அழகாக மாற்றுவதற்கு சில அத்தியாவசிய எண்ணெய்கள் உதவும்.

Eyebrows

புருவங்களைச் சரி செய்வதற்கும் அடர்த்தியாக வளர வைப்பதற்கும் சந்தைகளில் விலையுயர்ந்த பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றை விடச் சிறந்த ஒன்றாக உங்களுக்கு இந்த எண்ணெய்கள் உதவும். நீங்கள் இயற்கையாக உங்கள் புருவங்களை வளர வைக்க விரும்பினால் இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தி நான்கு முதல் எட்டு வாரங்களுக்குள் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும். எனவே உங்களுக்குச் சற்று பொறுமை அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும். ரோஸ்மேரி எண்ணெயை தடவுவதால் இரத்த ஓட்டத்தை எளிதாக்கி முடிவளச்சியை தூண்டுகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய், 1 வைட்டமின் ஈ மாத்திரை எடுத்து வைட்டமின் ஈ மாத்திரையில் இருக்கும் எண்ணெய்யை வெளியே எடுத்து அதனுடன் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்துக் கலக்கி புருவங்களில் தடவி ஐ ப்ரோ பிரஷ் கொண்டு லேசாகச் சீவி விடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து ஈரத்துணியைக் கொண்டு துடைத்து எடுங்கள். இதனை நீங்கள் தினமும் செய்யலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, ஆண்டி-மைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. 2 சொட்டு லாவெண்டர் எண்ணெய், ½ தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து புருவங்களில் தேய்த்து ஐ ப்ரோவ் பிரஷ் கொண்டு லேசாகச் சீவி விட்டு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

வெந்தய எண்ணெய்

வெந்தய எண்ணெய்

வெந்தய எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் இரத்த ஓட்டத்தை எளிதாக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2 துளிகள் வெந்தய எண்ணெய் 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து இரண்டையும் நன்றாகக் கலந்து புருவங்களில் தடவி ஐ ப்ரோவ் பிரஷ் கொண்டு லேசாகச் சீவி 15 நிமிடங்கள் கழித்து ஈரத்துணியைக் கொண்டு துடைத்து எடுங்கள்.

அவோகேடா எண்ணெய்

அவோகேடா எண்ணெய்

அவோகேடா எண்ணெயில் தாதுகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. அத்துடன் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளன. இவை உங்கள் புருவங்களை நன்கு வளரச் செய்கின்றன. 2 சொட்டு அவோகேடா எண்ணெய் 1 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து புருவங்களில் தடவி ஐ ப்ரோவ் பிரஷ் கொண்டு சீவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய் உங்கள் புருவங்களின் வேர்ப்பகுதியில் ஈரப்பதத்தினை தூண்டுகிறது. அத்துடன் புருவ முடியின் சேதத்தைத் தடுத்து புருவங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் வைட்டமின் சி, பி மற்றும் ஈ ஆகிய தாதுக்கள் நிறைந்து இருப்பதால் புருவங்கள் விரைவில் வளரும். 2 சொட்டு ஜோஜோபா எண்ணெய், ½ தேக்கரண்டி கற்றாழை ஜெல், 4 சொட்டு வெங்காய சாறு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து புருவங்களில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உங்கள் சருமத்தைச் சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுகிறது. அத்துடன் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 2 முதல் 3 சொட்டு தேயிலை மர எண்ணெய் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து புருவங்களில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் எழுத்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களை ஈரப்பதமாக்குவதற்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் சேதத்தைத் தடுக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். 1 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு சிறிய பஞ்சு அல்லது காட்டன் துணியைத் தேங்காய் எண்ணையில் நனைத்து புருவங்களில் தடவிவிட்டுத் தூங்குங்கள். காலையில் எழுந்து ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தினை கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறிதளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து உங்கள் புருவங்களில் மசாஜ் செய்து ஒன்று முதல் மூன்று மணி நேரம் கழித்து முகத்தினை கழுவுங்கள். இதனை நீங்கள் தினமும் செய்யலாம்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது முடியின் வளர்ச்சியை எளிதாக்கி, முடி உதிர்தலைத் தடுக்கிறது. தூய ஆமணக்கு எண்ணெய் ஒரு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிதளவு எண்ணையை கைகளில் தடவி முயற்சி செய்து விட்டு எந்தவித பிரச்சனையும் இல்லையெனில் பயன்படுத்துங்கள். ஆமணக்கு எண்ணெயை எடுத்து புருவங்களில் மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து . மேக்கப் ரிமூவர் மூலம் அதைத் துடைத்து எடுங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவுங்கள்.

எள் எண்ணெய்

எள் எண்ணெய்

எள் எண்ணெய் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவைக் கொண்டுள்ளன. இவை முடியை ஆரோக்கியமான வளரச் செய்கிறது. எள் எண்ணெய் எடுத்து புருவங்களில் மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்து ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகங்களைக் கழுவுங்கள்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் புரதங்கள், வைட்டமின் ஈ, டி, ஏ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஒமேகா -9 ஆகிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. பாதாம் எண்ணெய் எடுத்து புருவங்களில் மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்து முகங்களைக் கழுவுங்கள்.

ஆளி விதை எண்ணெய்

ஆளி விதை எண்ணெய்

ஆளி விதை எண்ணெயில் வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு தேக்கரண்டியளவு ஆளிவிதை எண்ணெய் எடுத்து புருவங்களில் தடவி ஐ ப்ரோவ் பிரஷ் கொண்டு லேசாகச் சீவி இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து முகங்களைக் கழுவுங்கள்.

சிடார்வுட் எண்ணெய்

சிடார்வுட் எண்ணெய்

சிடார்வுட் எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2 தேக்கரண்டியளவு சிடார்வுட் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து உங்கள் புருவங்களில் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடங்கள் விட்டு பின்பு நீரில் கழுவுங்கள்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. 1 வைட்டமின் ஈ மாத்திரை எடுத்து அதில் உள்ள எண்ணையை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணையை கொண்டு உங்கள் புருவங்களை மசாஜ் செய்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் எழுந்து முகங்களை கழுவுங்கள்.

தைம் எண்ணெய்

தைம் எண்ணெய்

தைம் எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2 சொட்டு தைம் எண்ணெய் 5 சொட்டு லாவெண்டர் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு விர்ஜின் ஆலிவ் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து புருவங்களில் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இவற்றில் எந்த முறை உங்களுக்கு சிறந்ததோ அதை பயன்படுத்தி அழகான புருவங்களை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, September 17, 2019, 15:56 [IST]
Desktop Bottom Promotion