Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? அப்ப இந்த மாஸ்க் போடுங்க...
சரும நிறத்தை அதிகரிக்க பலர் விரும்புவார்கள். இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் ஏராளம். ஆனால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று சிவப்பு சந்தனம்.
சரும நிறத்தை அதிகரிக்க பலர் விரும்புவார்கள். இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் ஏராளம். ஆனால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பல்வேறு இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சிவப்பு சந்தனம். சிவந்த சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இது சருமத்திற்கு ஊட்டத்தை வழங்குவதோடு, சருமத்தை வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

சிவப்பு சந்தனம் பொலிவிழந்து சோர்ந்து காணப்படும் சருமத்திற்கு உயிர்பித்து, அழகாக வெளிக்காட்டும். அதோடு முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கத்தைப் போக்கி, இளமையான சருமத்தைப் பெற உதவும். அதுமட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்கவல்லது. அதில் முகத்தில் காணப்படும் மேடு பள்ளங்கள், அதிகப்படியான எண்ணெய் பசை, பருக்கள், வெயிலால் கருமையான சருமம், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது சிவப்பு சந்தனத்தை எப்படியெல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.

சிவப்பு சந்தனம் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1-2 டீஸ்பூன் சிவப்பு சந்தன பவுடரை எடுத்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, திறந்த சருமத் துளைகளை சுருங்கச் செய்யும். மேலும் இந்த ஃபேஸ் பேக் பருக்கள், பிம்பிள் போன்றவற்றையும் போக்கி, சரும நிறத்தை அதிகரித்து காட்ட வல்லது.

சிவப்பு சந்தனம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சிவப்பு சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, அதில் பால் அல்லது புளித்த தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி ஓரளவு காய்ந்த பின், நீரால் கைகளை நனைத்து மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் முன் போட்டால், மறுநாள் காலையில் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

சிவப்பு சந்தனம் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் சிவப்பு சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

சிவப்பு சந்தனம் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 3-4 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் சிறிது தக்காளி ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* வேண்டுமானால், இத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையை போக்க செய்வதோடு, சருமத்தில் உள்ள கருமையான தழும்புகளையும் மறையச் செய்யும்.

சிவப்பு சந்தன பவுடர் மற்றும் சீமைச்சாமந்தி டீ
* ஒரு பௌலில் 4 டீஸ்பூன் சிவப்பு சந்தன பவுடர், 2 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. அதோடு இது ஒரு ஆன்டி-ஏஜிங் ஃபேஸ் பேக்கும் கூட.



Click it and Unblock the Notifications