Just In
- 5 hrs ago
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- 13 hrs ago
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- 14 hrs ago
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- 14 hrs ago
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
Don't Miss
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- News
அங்கே போனாலும் எடுபடாது.. சல்லி சல்லியாக உடையும் ஓபிஎஸ் பிளான்.. ஆஹா.. இவர் என்ன இப்படி சொல்லிட்டாரே
- Technology
Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. அதுவும் ஒரே மாசத்துல.. காரணத்தை சொன்னா நம்புவீங்களா?
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- Movies
தோல்வியை தாங்க முடியாமல் பேசுகின்றனர்.. கடுமையாக விமர்சித்தவர்களுக்கு அசீம் சரியான பதிலடி!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சீக்கிரம் வெள்ளையாகணுமா? அப்ப பேக்கிங் சோடாவை இப்படி யூஸ் பண்ணுங்க...
வெள்ளையாவதற்கு யாருக்கு தான் ஆசை இருக்காது, என்ன தான் வெளியே வெள்ளையாக விருப்பமில்லாதது போன்று வெளிக்காட்டினாலும், அனைவரது மனதிலும் வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் க்ரீம்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், சரும ஆரோக்கியம் தான் பாழாகும். அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சருமமும் நீண்ட காலம் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.
சரும நிறத்தை அதிகரிக்க நமது சமையலறையில் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா. பலருக்கும் பேக்கிங் சோடாவை சருமத்திற்கு பயன்படுத்தலாமா என்ற ஓர் கேள்வி இருக்கும். அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் இருக்கும். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் கீழே சரும நிறத்தை அதிகரிக்க பேக்கிங் சோடாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1. பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்
உங்கள் முகத்தின் நிறம் மட்டும் கருமையாக உள்ளதா? அப்படியெனில் அதை சீக்கிரம் வெள்ளையாக்க 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக இருக்கும் முகத்தில் தடவி 5-10 நிமிடம் நன்கு காய வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், சரும நிறம் வெள்ளையாவதோடு, சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

2. பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
இந்த காம்பினேஷன் சருமத்தில் அற்புதமான மாயங்களை செய்யும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 3 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். உங்களது சருமம் சென்சிடிவ் என்றால், வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, பின் அதைப் பயன்படுத்த வேண்டும். இந்த கலவையை கருமையாக இருக்கும் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தின் pH அளவை பராமரிக்கும். வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக்குடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

3. பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளதால், இதை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் இந்த பேக்கில் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது, அது சருமத்தை வறட்சியடையாமல் தடுக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு, 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 1/4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் இந்த பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.

4. பேக்கிங் சோடா மற்றும் தக்காளி சாறு
தக்காளி சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது மற்றும் இதில் உள்ள நேச்சுரல் ப்ளீச்சிங் பொருள் சருமத்தை பிரகாசமாக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தக்காளி சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, சருமத்தை மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் பசையைக் குறைக்கும்.

5. பேக்கிங் சோடா, சோள மாவு மற்றும் மஞ்சள் தூள்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள தழும்புகள், சரும கருமை, கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவதில் சிறந்தது. அதோடு இந்த ஃபேஸ் பேக் பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பொலிவாக்க உதவி புரியும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த சருமம் எப்போது பிரகாசமாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.