Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
மழைக்காலத்தில் சருமம் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், பருவ காலத்திற்கு ஏற்ப சருமத்தில் பிரச்சனைகள் எழுந்து, சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன.
மழைக்காலத்தில் பல சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள், சரும அரிப்புகள், எரிச்சல் மற்றும் தடிப்புகள் போன்றவை அடங்கும். என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், பருவ காலத்திற்கு ஏற்ப சருமத்தில் பிரச்சனைகள் எழுந்து, சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து மேம்படுத்தலாம்.

இயற்கை பொருட்கள் பாதுகாப்பானவை, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாததால், அனைத்து வயதினரும் சற்றும் அச்சம் கொள்ளாமல் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் குறைபாடற்ற அழகான சருமத்தைப் பெற உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ் பேக் #1
* முதலில் ஒரு பௌலில் ரோஸ் வாட்டர் சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #2
உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அப்படியானால் திறந்துள்ள சருமத் துளைகளை சுருக்குவதற்கு ஒரு அற்புதமான ஃபேஸ் பேக் உள்ளது. அது பின்வருமாறு:
* தக்காளியை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்க வேண்டும்.
* பின் அந்த உறைய வைக்கப்பட்ட தக்காளி துண்டுகளால் தினமும் சருமத்தை மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஃபேஸ் பேக் #3
உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் மற்றும் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி குறைந்தது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதால, சருமத்துளைகள் மூடுவதோடு, முகப்பரு பிரச்சனையும் குறையும்.

ஃபேஸ் பேக் #4
உங்கள் சருமத்தை மென்மையாக்க விரும்பினால் இந்த ஃபேஸ் பேக் பெரிதும் உதவியாக இருக்கும்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #5
* நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ஆப்பிள் மற்றும் பீச் துண்டுகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications