Just In
- 12 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 13 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 23 hrs ago
மட்டன் தால்சா
- 23 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
உலகத்தர இயக்குநருடன் இணைகிறாரா உலகநாயகன்?... அடுத்த ஆண்டில் துவங்கும் சூட்டிங்!
- News
வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம்
- Sports
இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
- Finance
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க
முகப்பரு என்பது 10 சதவீத மக்களில் 9 சதவீதம் மக்களுக்கு வரும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. இதில் சிலருக்கு முகப்பரு வந்த இடத்தில் தழும்பாக மாறி வடுவாகி விடும். அந்த வடுக்கள் முகத்தில் மிகவும் அசிங்கமான ஒன்றாக இருக்கும் பார்ப்பதற்கே பிடிக்காது. இந்த வடுக்களைப் போக வைப்பதற்கு சில மோசமான பொருட்கள் சந்தைகளில் விற்கப்படுகிறது. இவற்றில் சில விலையுயர்ந்ததாகவும் மற்றவை மேலும் சில சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. எனவே உங்கள் பருக்களின் வடுக்களை நீக்க உங்களுக்குச் சிறந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.
முகப்பரு பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உங்கள் வயது என்று கருத வேண்டாம். பொதுவாக முகப்பரு பிரச்சனைகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளினாலும் மற்றும் முகத்தில் இருக்கும் எண்ணெய், இறந்த சரும செல்கள், மூடப்பட்ட முகத்துளைகள் ஆகியவற்றால் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முகப்பரு வடுக்கள் உங்கள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்த விதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் மற்றவர்கள் நம் முகத்தைப் பார்க்கும் போது சற்று சங்கடமாக உணர வைக்கும்.

அத்தியாவசிய எண்ணெய்கள்
அத்தியாவசிய எண்ணெய் உங்கள் முகத்தில் உள்ள மூடப்பட்ட துளைகளைச் சுத்தம் செய்து அதனை ஹைட்ரேட் செய்கிறது. மேலும் இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உங்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவையும் குறைக்கிறது. அத்துடன் தூக்கமின்மையைப் போக்கி, ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் முகப்பரு வராமல் தடுத்து அதன் வடுக்களையும் போக்குகிறது.
MOST READ: ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது

டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயில் என்னும் தேயிலை மர எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. இது உங்களின் பரு மற்றும் பருக்களின் வடுக்களைச் சரி செய்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்று. இரண்டு தேக்கரண்டியளவு தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து பருக்கள் அல்லது வடுக்கள் உள்ள இடங்களில் தேயுங்கள். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் அத்துடன் இரண்டு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் சேர்த்துக் கலந்து அப்ளை செய்யுங்கள். இது உங்கள் பருக்கள் மற்றும் வடுக்களை 2 வரங்களுக்குக்குள அகற்றி விடும்.

பெர்கமோட் எண்ணெய்
பெர்கமோட்டின் எண்ணெய் இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மையை பெற்றுள்ளது. உங்கள் சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டியளவு மற்றும் பெர்கமோட் எண்ணெய் இரண்டு தேக்கரண்டியளவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேய்த்து வாருங்கள். விரைவிலேயே நீங்கள் முகப்பரு இல்லாத ஒளிரும் சருமத்தைப் பெறுவீர்கள்.

ஆர்கனோ எண்ணெய்
ஆர்கனோ எண்ணெய் இத்தாலிய உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகை எண்ணெயாகும். இந்த மூலிகை எண்ணெய் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த எண்ணையை நீங்கள் முகப்பரு வடுவினை போக்கத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆர்கனோ எண்ணெயை ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து தினமும் தடவி வாருங்கள். முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை பெற்றிடுங்கள்.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் சுத்திகரிப்பு குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு தேக்கரண்டியளவு திராட்சை விதைகள் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயுடன் நான்கு துளி கிராம்பு எண்ணெயைச் சேர்த்து முகப்பரு அல்லது வடுக்கள் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவிலேயே சரி ஆகிவிடும்.

லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் ஐந்து சொட்டுகள் மற்றும் பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டியளவு சேர்த்துக் கலந்து முகப்பரு மற்றும் வடுக்கள் உள்ள இடங்களில் தடவுங்கள் இவை வடுக்களை மறைய வைத்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும்.
MOST READ: அட! டூத்பேஸ்ட்ட சருமத்தில பயன்படுத்தினா இது போய்டுமாம். என்னனு பாருங்க.

அத்தியாவசிய எண்ணெய்களின் கலவை
உங்களுக்குத் தேவைப்பட்டால் அத்தியாவசிய எண்ணெய்களின் கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். இவை உங்கள் முகப்பருக்கு எதிராகச் சிறப்பான முறையில் போராடும்.
ஜோஜோபா எண்ணெய் ஒரு தேக்கரண்டியளவு.
லாவெண்டர் எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.
பிராங்கிசென்ஸ் எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.
எலுமிச்சை எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.
இவை எல்லாம் நன்றாகக் கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த கலவையை உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு சோப்பு வைத்து முகத்தினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து விட்டுப் பயன்படுத்துங்கள்.