For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை ஒரே இரவில் போக்கும் 5 பொருட்கள்..!

|

அழகு என்பது ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பொதுவானதே. பெண்கள் எந்த அளவிற்கு அழகில் அக்கறை காட்டுகிறார்களோ அதை விட குறைந்த அளவே ஆண்களும் அக்கறை காட்டுகிறார்கள். எதுவாக இருந்தாலும் அழகு என்பது முகத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்து கொள்வதே.

ஆண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை ஒரே இரவில் போக்கும் 5 பொருட்கள்..!

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானது தான். ஆனால், இதனை நம்மால் எளிதாக பருக்கள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும் பார்த்து கொள்ளலாம். இதற்கு பெருசா எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருக்க கூடிய வெறும் 5 பொருட்களே போதும். அந்த முக்கியமான 5 பொருட்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொண்டு, பயன் பெறுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

நம் குழந்தையாக இருக்கும் போது நமது சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். நாம் வளர வளர இவற்றின் தன்மை கடினமாகி கொண்டே போகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் வேறுபடும். ஆனால், முகத்தில் உண்டாக கூடிய பிரச்சினைகள் எல்லாமே ஒன்று தான்.

குறிப்பு #1

குறிப்பு #1

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற வேண்டுமென்றால் இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். இதற்கு தேவையானவை...

ஆரஞ்சு 2 ஸ்பூன்

கற்றாழை ஜெல் 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

கற்றாழையை அரைத்து கொண்டு அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஆரஞ்சு சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 15 நிமிடம் சென்று இதனை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் அழகாக இருப்பீர்கள்.

குறிப்பு #2

குறிப்பு #2

கருமையாக உள்ள உங்களின் முகத்தை வெண்மையாக மாற்ற பால் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தி பாருங்கள். அதற்கு 1 ஸ்பூன் பாலில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் கொடுங்கள். பிறகு முகத்தை 20 நிமிடத்திற்கு பின் கழுவி விடிவும்.

MOST READ: யப்பா..! யார்ரா இவன், எல்லார் கூடவும் இருக்கான்..! இவர் பண்ணின வேல என்னனு கண்டுபிடிங்க..?

குறிப்பு #3

குறிப்பு #3

பருக்கள் மற்றும் முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள்..

நெல்லி சாறு 2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை

செய்முறை

நெல்லிக்காயை அரிந்து, அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதற்கு பதிலாக நெல்லிக்காய் பொடியையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து இதனுடன் தேன் கலந்து கொண்டு, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை நீரில் கழுவவும்.

குறிப்பு #4

குறிப்பு #4

ஆண்களின் முகத்தை விரைவிலே அழகாக்க தயிர் ஒன்றே போதும். ஆம், 2 ஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகுமுகத்தை நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தை எப்போதும் அதிக பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.

குறிப்பு #5

குறிப்பு #5

முகத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்ற கூடியத் தன்மை இந்த குறிப்பில் உள்ளது. இதனை தயாரிக்க தேவையானவை...

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

யோகர்ட் 2 ஸ்பூன்

ஆரஞ்சு சாறு 1 ஸ்பூன்

MOST READ: ஆண்களே! Break-up ஆனதுக்கு பின் உங்களின் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்கள் என்னென்ன..?

செய்முறை

செய்முறை

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த குறிப்பு உங்களுக்கு நல்ல பலனை தரவல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Bright Face For Men

Here are some tips to get bright face for men.
Story first published: Friday, January 25, 2019, 17:40 [IST]
Desktop Bottom Promotion