Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
உங்க முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? எலுமிச்சை பழத்தை இப்படி தேய்ங்க...
பொதுவாக நம் வீடுகளிலும் இருக்கக்கூடிய எலுமிச்சைப் பழத்தை வைத்து முகசுருகுக்த்தை போக்கும் முறையை கொடுத்துள்ளோம்.
வயது முதிர்விற்கான ஆரம்ப அறிகுறியாக தோன்றுவது தோல் சுருக்கம். ஆனால் வயது முதிர்வு மட்டுமே சுருக்கம் மற்றும் கோடுகள் தோன்றுவதற்கான ஒரே காரணம் அல்ல.

சருமத்தை ஒழுங்கற்ற முறையில் பராமரிப்பது, மன அழுத்தம், சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதம், நீர்ச்சத்து குறைபாடு, போன்றவையும் தோலில் சுருக்கம் உண்டாகக் கூடிய மற்ற காரணிகளாகும்.

எலுமிச்சை
சருமத்தில் உள்ள கொலோஜென் உற்பத்தி தடைபடும்போது அல்லது எலாஸ்டின் ஃபைபர் மற்றும் கொலோஜென் சேதமடையும்போது சருமத்தில் சுருக்கம் தோன்றுகிறது. ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம். இன்றைய பதிவில் நாங்கள் உங்களுக்காக இந்த சரும சுருக்கத்தைப் போக்க சில எளிய முயற்சிகளைக் கூறவிருக்கிறோம். அதுவும் மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலப்பொருளான எலுமிச்சையை பயன்படுத்தி சரும சுருக்கத்தைப் போக்குவது எப்படி என்று நாம் இப்போது பார்க்கலாம்.
எலுமிச்சை புளிப்பு சுவை கொண்ட பழம் என்பதால் இதில் வைடமின் சி அதிகமாக இருக்கும். இது கொலோஜென் உற்பத்திக்கு உதவும். மேலும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை மேம்படும். எலுமிச்சையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் துளைகள் இறுக்கமடைகிறது. சருமம் பளிச்சென்று மாறுகிறது. நாம் இப்போது சருமத்தில் சுருக்கத்தைப் போக்க எலுமிச்சையை பயன்படுத்தும் முறைகளைப் பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய்
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
செய்முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் விரல்களால் எடுத்து நெற்றி மற்றும் கண்களுக்கு அடிப்பகுதியில் தடவவும். பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஆலிவ் எண்ணெய்க்கு மாற்றாக பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை மற்றும் தேன்
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு'
ஒரு ஸ்பூன் தேன்
செய்முறை
தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தடவவும். பத்து நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன்
தூள் செய்யப்பட்ட சர்க்கரை ஒரு ஸ்பூன்
செய்முறை
இது ஒரு ஸ்க்ரப் போன்ற தீர்வைத் தரும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை மற்றும் சர்க்கரை தூளை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தடவவும். உங்கள் விரல் நுனியால் இரண்டு அல்லது மூன்று நிமிடம் சுழல் வடிவத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு பதினைந்து நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யவும்.

எலுமிச்சை மற்றும் யோகர்ட்
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் யோகர்ட்
செய்முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் கிளிசரின்
தேவையான பொருட்கள்
5 ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் கிளிசரின்
ஒரு ஸ்பூன் பன்னீர்
செய்முறை
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தெளித்துக் கொண்டு உறங்கச் செல்லவும். மறுநாள் காலை முகத்தைக் கழுவவும். இந்த கலவையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்து தினமும் உங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலுமிச்சை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்
தேவையான பொருட்கள்
2 - 3 துளிகள் எலுமிச்சை எண்ணெய்
ஒரு ஸ்பூன் வைடமின் ஈ எண்ணெய்
ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்
செய்முறை
எலுமிச்சை எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கண்களுக்கு அடியில் மற்றும் முகத்தில் இந்த எண்ணெய்க் கலவையை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இரண்டு நிமிட மசாஜ் ஒரு இதமான உணர்வைத் தரும். தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் இதனை செய்து வரலாம்.



Click it and Unblock the Notifications