அந்த கிரீம்... இந்த கிரீமெல்லாம் இனி வேண்டாம்... இத மட்டும் போடுங்க... ஜொலிப்பீங்க...

மனித உடலுக்குத் தேவையான அனைத்துக் கனிமங்கள் மற்றும் வைட்டமின்களை அதிக அளவில் கொண்டுள்ளது வாழை.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தைச் சாப்பிடுவதையோ அல்லது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதையோ நாம் அனைவரும் விரும்புகிறோம். மனித உடலுக்குத் தேவையான அனைத்துக் கனிமங்கள் மற்றும் வைட்டமின்களை அதிக அளவில் கொண்டுள்ளது வாழை. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

beauty

செரிமானத்திற்கு உதவுவதுடன் நம் சருமத்தை புத்துணர்வூட்டும் தன்மையையும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தின் இந்த நன்மைகளைப் பொதுவாக நாம் அனைவரும் அறிவோம். அதனால் கண்ட கண்ட கிரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துவதை இன்றோடு விட்டுவிட்டு, நமக்கு மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய, நல்ல பலன் தரக்கூடிய வாழைப்பழத்தை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

ஆனால் இதே வாழைப்பழத்தை, சாப்பிடுவதற்குப் பதில் வெளிப்புறமாகப் பயன்படுத்தினால் அழகான மற்றும் பளபளப்பான தோலைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாழைப் பழத்திலுள்ள வைட்டமின் ஏ மனிதர்களின் தோலுக்கு சிறந்த ஒன்றாகும். கொலாஜனின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தோலின் நெகிழ்ச்சித்தன்மையை தக்கவைக்க உதவுகிறது. வைட்டமின் "ஈ" தோலுக்குக் காப்பாளனாகச் செயல்படுகிறது. இது தோலில் தோன்றும் குறைபாடுகளை எதிர்த்து நிற்கிறது, தோலின் சூரிய ஒளிக்கதிர்களைத் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது, சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் குறைக்கிறது.

திறனுள்ள வாழைப்பழ பேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி முகத்திலுள்ள சுருக்கங்களைத் தடுக்கவும், பருக்களை அகற்றவும், தோலை ஷைனிங் ஆக்கவும் மற்றும் இன்னும் பலவும் செய்யமுடியும். ஆரோக்கியமான மற்றும் மென்மையான தோலைப் பெறுவதற்கு வாழைப்பழங்களை எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்,

தோல் பளபளப்பாக்க

தோல் பளபளப்பாக்க

வாழையிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஷைனிங் ஆகவும் வைக்க உதவுகின்றன. இது உங்கள் தோலுக்கு குறைவான அழுத்தத்தை கொடுத்தல் மற்றும் வறட்சியைச் சரி செய்தல் போன்றவற்றால் புத்துணர்வூட்டும் வேலையைச் செய்கிறது. கீழுள்ள வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தி எளிதாக ஒளிரும் சருமத்தைப் பெற முடியும்,

தேவையான பொருட்கள்:

1. 1 வாழை

2. 1 கப் தண்ணீர்

எப்படி உபயோகிப்பது:

வாழைப்பழத்தை முதலில் சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முதல் பயன்பாட்டிலேயே வித்தியாசத்தை உணருவீர்கள் நீங்கள்.

தோல் பிரகாசிக்க

தோல் பிரகாசிக்க

இந்த இயற்கையான பேஸ் மாஸ்க், கரும்புள்ளிகளை எளிதில் மறைத்துவிடும்.கறைகளை நீக்கி, மந்தமான தோலை ஷைனிங் ஆக்குகிறது. சிறந்த முடிவுகளைப் பெற, இந்த பிரகாசமான பேஸ்மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1. வாழை

2. 1 டீஸ்பூன் தேன்

எப்படி உபயோகிப்பது:

இதற்கு, ஒரு பழுத்த வாழை தேவை. வாழைப்பழத்தை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை ப்ளெண்டரில் போட்டு நன்றாகக் கலக்கவும். 1 தேக்கரண்டி தேனை இந்தக் கலவையில் போட்டு நன்கு கலக்கவும். உங்கள் முகத்தில் இந்த கெட்டியான கலவையைப் பூசி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான சுடுநீரால் கழுவவும்.

பருக்களைப் போக்க வாழை

பருக்களைப் போக்க வாழை

பருக்கள் மற்றும் முகப்பருவினால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இந்த வாழைப்பழ பேக் முகப்பரு வடுக்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை குறைக்கும். சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேக்கைப் பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:

1. வாழை--- 1

2. தேன் --- 1 தேக்கரண்டி

3. எலுமிச்சை சாறு--1 டீஸ்பூன்

எப்படி உபயோகிப்பது:

ஒரு வாழைப்பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும். அடுத்து, அதை பேஸ்ட்டாக்க நன்றாகப் பிசையவும். பிசைந்த கலவையில், 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் பூசுங்கள்.20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். குளிர்ந்த நீரில் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

டிரை ஸ்கின்னுக்கு

டிரை ஸ்கின்னுக்கு

வாழைப்பழத்தில் இயற்கையாகவே உள்ள நீராவி ஏஜெண்ட்ஸ் தோலை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. இதை ரெகுலராக பயன்படுத்தினால், உங்களுக்கு மென்மையான, ஈரப்பதமான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைக் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

1. ½ வாழை

2. 1 ஸ்பூன் ஓட்மீல்

3. 1 ஸ்பூன் தேன்

4. 1 ஸ்பூன் முட்டையின் மஞ்சள் கரு

எப்படி உபயோகிப்பது:

வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். ஓட்மீலைப் பௌடராக்கி அதை நன்றாகக் கலக்கவும். பௌடரான ஓட்மீலை, பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் சேர்க்கவும். இதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி உலர வையுங்கள். முகத்தை வேகமாகவும், சிறப்பாகவும் பளிச்சென்றாக்க வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion