Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆண்களே, உடனே 10 வயது குறையணுமா..?அப்போ இந்த பிளம்ஸ் பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!
பலருக்கு நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கும். இளமையாக இருப்பதற்கு பல வகையான மாத்திரைகளும், மருந்துகளும் கூட கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை எளிய முறையில் செய்து தருகிறது பிளம்ஸ் பழங்கள். இவை முக அழகு முதல் இளமை பிரச்சினை வரை அனைத்தையும் சரி செய்கிறது. வாங்க, பிளம்ஸ் பழத்தை வைத்து இளமையாக நீண்ட காலம் இருப்பது எப்படி என்பதை தெரிந்து பயன் பெறுவோம்.

சுவைமிக்க பழம்..!
இந்த் பிளம்ஸ் பழம் மற்ற பழங்களை விட தனி சிறப்பு பெற்றது. இவை உடல் நலத்தையும், முக ஆரோக்கியத்தையும் சேர்த்தே காக்கும். இந்த பழத்தில் வைட்டமின் எ, பீட்டா கரோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளதாம்.

கருமையை நீக்க
முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை. மாறாக இந்த பிளம்ஸ் குறிப்பே போதுமானது.
தேவையானவை :-
தயிர் 1 ஸ்பூன்
பிளம்ஸ் 3

செய்முறை :-
முதலில் பிளம்ஸ் பழங்களை நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு தயிருடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த் குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை நீங்கி விடும்.

இளமையான முகத்தை பெற
முகம் பார்க்க மிக இளமையாக இருக்க பிளம்ஸ் வைத்து செய்கின்ற அழகியல் குறிப்பு நன்கு உதவும். இது உங்கள் முகத்தில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி அதிக காலம் இளமையாக வைத்து கொள்ளும். இதற்கு தேவையானவை...
தேன் 2 ஸ்பூன்
பிளம்ஸ் 2

செய்முறை :-
பிளம்ஸ் பழத்தை அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நீண்ட கால இளமையை பெறலாம்.

சுருக்கங்கள் மறைய
முகத்தில் உள்ள சுருக்கங்கள் தான் நம்மை மிக வயதானவரை போன்று காட்டுகிறது. இதனை சரி செய்ய இந்த குறிப்பு பயன்படும்.
தேவையானவை :-
வெள்ளரிக்காய் ஜுஸ் 2 ஸ்பூன்
ரோஸ் நீர் 1 ஸ்பூன்
பிளம்ஸ் 2

செய்முறை :-
முதலில் பிளம்ஸை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் ரோஸ் நீர் அல்லது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் சுருக்கங்களை போக்கி விடும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க
உங்களின் முடி நன்கு வளர இந்த குறிப்பு போதும்.
தேவையானவை :-
தயிர் 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
பிளம்ஸ் 3

செய்முறை :-
தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து பிளம்ஸை அரைத்து கொண்டு, இவற்றுடன் கலந்து தலையில் தடவவும். 30 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.



Click it and Unblock the Notifications
