Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஒரே வாரத்தில் சரும சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? அப்ப தினமும் இத பண்ணுங்க...
இங்கு ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் க்ரீம்மை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் பழக்கவழக்கங்களால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சீக்கிரமே சருமம் சுருங்க ஆரம்பிக்கின்றன. இப்படி சருமத்தில் சுருக்கங்கள் வருவதால், அது இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தருகிறது.

இதனைத் தடுப்பதற்கு என்ன தான் கடைகளில் க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல்கள் இருப்பதால், தற்காலிக பலன் கிடைக்குமே தவிர நிரந்தர பலன் கிடைக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் க்ரீம்மை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று கொடுத்துள்ளது.

தேவையான பொருட்கள்:
பாதாம்/ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து, தனியாக 5 நிமிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் முகத்தை நீரால் நன்கு கழுவி விட்டு, துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

செய்முறை #3
பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை #4
பின் 1/2 மணிநேரம் கழித்து, ஈரமான துணியால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், ஒரே வாரத்தில் சரும சுருக்கங்களைப் போக்கலாம்.



Click it and Unblock the Notifications
