Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முகம் முழுதும் பருக்களா? இந்த 7 குறிப்புகளை உபயோகிச்சுப் பாருங்க!!
முகப்பருக்களை போக்க வீட்டிலேயே உபயோகிக்க 8 வழிமுறைகளை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பருக்கள் முகத்தில் தோன்றினால், அவை முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் முகத்தில் வரும் பருக்களை குறைக்க முடியும்.
நீங்கள் வாரம் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இவை விரைவில் பயன்தரும். சருமத்திற்கும் மேலும் அழகு சேர்க்கும்.

1. வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்

2.கிராம்பு
கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். முதலில் கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பின்னர் குளிர வைத்து விடவேண்டும், பிறகு அதனை எடுத்து அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

சந்தன பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவு பெறும்.

தேன் மற்றும் பால்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து ஊற வைத்த பின்னர் பால் கொண்டு முதலில் கழுவி, அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால்,சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

8. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்களை எளிதில் நீக்கிவிடலாம்.

ஆவி பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஆவிப்பிடித்தால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்



Click it and Unblock the Notifications