Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சூரியனால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்து, வெள்ளையான சருமத்தைப் பெற இத செய்யுங்க...
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீக்கி, சருமம் வெள்ளையாகவும் மாறும்.
பலர் சருமத்திற்கு அன்றாடம் தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலர் அலுவலக வேலைப்பளுவால் நீண்ட நாட்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல் இருப்பார்கள்.
இப்படி நீண்ட நாட்கள் பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீக்கி, சருமம் வெள்ளையாகவும் மாறும்.

இறந்த செல்களைப் போக்கும் ஸ்கரப்!
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு பௌலில் தேன், ஆரஞ்சு ஜூஸ், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் பாதி எலுமிச்சையை பிழிந்து கலந்து, பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி மென்மையாக 20 நிமிடம் ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

சரும கருமையைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு - 1 டீஸ்பூன்
ஷியா வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
ஒரு பௌலில் அரிசி மாவு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, ஷியா வெண்ணெய், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் அரிசி கழுவிய நீரால் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று வெள்ளையாக காட்சியளிக்கும்.

குறிப்பு
இந்த முறையை வாரத்திற்கு 3 நாட்கள் என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதையும் நன்கு காணலாம்.



Click it and Unblock the Notifications
