Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவினால், பருக்கள், தழும்புகள் மாயமாய் மறையும்!
இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால், நிச்சயம் உங்கள் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து, அழகு கூடும்.
இக்காலத்தில் அகத்தோற்றம் மட்டுமின்றி, புறத்தோற்றமும் முக்கியம். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் அழகை மேம்படுத்த சருமத்திற்கு பல பராமரிப்புக்களை கொடுக்கின்றனர். ஆனால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது கெமிக்கல் கலந்த பொருட்களாக இருந்தால், சருமத்தில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கத் தான் செய்யும்.
ஆகவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான், முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும். இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால், நிச்சயம் உங்கள் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து, அழகு கூடும்.

தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா - சிறிது
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்
* தேன் - சிறிது
* எலுமிச்சை - 1/2

தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1
முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2
பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள்:
இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
