ஒரே வாரத்தில் உங்கள் இளமையை திரும்ப பெற வேண்டுமா? இதைப் படிங்க.

Written By: Hemalatha
Subscribe to Boldsky

இளமைக்கு வயதில்லை என்று பிகாஸோ சொன்னதைப் போல நீங்கள் இளமையாக இருக்க வயது தேவையில்லை. பாஸிடிவான எண்ணங்களும்,சருமப் பராமரிப்பும் இருந்தால் போதும்.

How to gain youthful skin beyond 30s

முப்பது வயதானாலே,முகத்தில் சுருக்கங்களும் கண்களுக்கு கீழே மெல்லிய கோடுகளும்,சருமத்தில் தொய்வும் ஏற்படும்.அதை எல்லாம் தவிர்க்க நிறைய பேர் கடையில் விற்கும் முதுமையை நீக்கும் க்ரீம்களையும் ,காஸ்மெடிக் அறுவை சிகைச்சைகளும்,பொடாக்ஸ் ,ஃபேஸ் லிஃப்ட் என எதை எதையோ செய்து பக்கவிளைவுகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

How to gain youthful skin beyond 30s

நீங்கள் பத்து வயது குறைந்தவர் போல் காண வேண்டுமா?

அப்படியென்றால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு கொஞ்சூண்டு மெனக்கெடுங்கள்.வேறொன்றும் பிரமாதம் இல்லை.வெந்த வெறும் சாதத்தினைக் கொண்டு மாஸ்க் போட்டால்,நீங்கள் இழந்த இளமையைப் பெறுவது உறுதி.எப்படி செய்வது என்று பாக்கலாம்.

தேவையானவை :

பால் -2 டேபிள் ஸ்பூன்

வெந்த வெறும் சாதம் -3 டேபிள் ஸ்பூன்.

தேன்-1 டேபிள் ஸ்பூன்.

How to gain youthful skin beyond 30s

பாலில் விட்டமிங்களும் புரோட்டினும் உள்ளன.அவை சரும செல்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. சருமம் முதிர்வதை தடுக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது.

சாதம் சுருக்கத்தைப் போக்கி,சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

சருமம் தொய்வடையாமல் இருக்க, கொலாஜன் முக்கியம். சாதம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் அதிகரிக்கச் செய்கிறது.இதனால் முதுமை அடைவதைத் தடுக்கிறது. தேன் சருமத்திற்கான மிகச் சிறந்த பலன்களைத் தருகிறது. ஈரப்பததை முகத்திற்கு அளித்து ,சருமம் தொய்வடையாமல் காக்கிறது.

செய்முறை:

முதலில் சாதத்தில் சிறிது நீர் கலந்து கூழ் போலச் செய்து கொள்ளவும். பி அதில் பால் ,தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல ஆக்குங்கள்.

அந்த கலவையை முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடுங்கள்.அதன் பின் குளிர்ந்த நீரினால் கழுவவும்.

தினமும் இவ்வாறு செய்து வந்தால் ஒரே வாரத்தில் சுருக்கங்கள் மறைந்து, முகம் பளபளக்கும்

How to gain youthful skin beyond 30s
English summary

How to gain youthful skin beyond 30s

How to gain youthful skin beyond 30s
Subscribe Newsletter