For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருவைப் போக்க வீட்டில் கட்டாயம் பின்பற்றக்கூடாத சில வழிகள்!

By Maha
|

சிலருக்கு முகப்பரு கன்னத்தில் அதிகமாக இருக்கும். இத்தகையவர்கள் தங்கள் அழகை இழப்பதோடு, மிகுந்த வேதனையையும் சந்திப்பார்கள். முகப்பருவால் கஷ்டப்படுபவர்களுக்குத் தான் அதன் வலி தெரியும். இதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள் மற்றும் பல தவறான வழிகளையெல்லாம் பின்பற்றுவார்கள்.

இயற்கை வழிகளுள் சில முகப்பருவை வேகமாக போக்கும். ஆனால் சில நிலைமையை மோசமாக்கும். எனவே முகப்பருவைப் போக்குகிறேன் என்று தவறான வழிகளைப் பின்பற்றி அவஸ்தைப்படாதீர்கள். இங்கு முகப்பருவைப் போக்க வீட்டில் கட்டாயம் பின்பற்றக்கூடாத சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சிலர் முகப்பருவைப் போக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தேங்காய் எண்ணெய் சருமத்துளைகளை அடைத்து, பருக்களின் நிலைமை மோசமாக்கும். ஆகவே எண்ணெய் பசை சருமத்தினர் எக்காரணம் கொண்டும் தேங்காய் எண்ணெயை முகத்திற்கு தடவாதீர்கள்.

கொக்கோ வெண்ணெய்

கொக்கோ வெண்ணெய்

முகப்பருவால் வந்த தழும்புபளை மறைக்க கொக்கோ வெண்ணெயைப் பயன்படுத்தினால், அதனால் சருமத்துளைகளில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அதனால் இன்னும் பருக்கள் வர தான் ஆரம்பிக்கும். ஆகவே உங்களுக்கு முகப்பரு அதிகம் வருமாயின், கொக்கோ வெண்ணெய்க்கு பதிலாக ஷியா வெண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

உப்பு

உப்பு

ஏற்கனவே முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் என்று அதனைக் கொண்டு ஸ்கரப் செய்தால், அது சருமத்தை தான் பாதிக்கும். அதிலும் உப்பு சருமத்துளைகளை நேரடியாக அடைக்காமல், சருமத்தி உலரச் செய்து, எண்ணெய் பசையின் உற்பத்தியை அதிகரித்து, பருக்கள் வரச் செய்யும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை நேரடியாக சருமத்தில் தடவி வந்தால், பருக்கள் போய்விடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாறாக அது சருமத்தை அதிக வறட்சியடையச் செய்யுமே தவிர, பருக்களைப் போக்காது.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

பலரும் டூத் பேஸ்ட்டை பருக்களின் மேல் வைத்தால், பருக்கள் போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் டூத் பேஸ்ட்டில் உள்ள ஃப்ளூரைடு, பருக்களின் நிலைமையை மோசமாக்கத் தான் செய்யுமே தவிர, போக்காது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

எண்ணெய் பசை சருமம் கொண்ட பலர் ஆல்கஹாலைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுப்பார்கள். ஆனால் இப்படி ஆல்கஹாலை நேரடியாக சருமத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேறி, மிகுந்த வறட்சிக்குள்ளாகி, சருமத்தை பாதிப்பிற்குள்ளாக்கும். ஆகவே பருக்களைப் போக்க எப்போதும் ஆல்கஹாலை நேடிரயாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Acne You Should Never Try

Here are some home remedies for acne you should never try. Read on to know more...
Desktop Bottom Promotion