Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்!!!
ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். மேலும் ரோஸ் வாட்டரை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் கடைகளில் கிடைக்கும் ஒரு அற்புதமான விலை குறைவான பொருள்.
ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி செய்து கோடையிலும் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கண் வீக்கத்தை குறைக்கும்
ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.

புத்துணர்ச்சியான சருமம்
கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

மென்மையான சருமம்
தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

வறட்சியான சருமத்தை போக்கும்
வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

மேக்கப் ரிமூவர்
இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

ஸ்ப்ரே
முகத்திற்கு மேக்கப் போட்ட பின்னர், இறுதியில் ரோஸ் வாட்டரை லேசாக முகத்திற்கு தெளித்து கொண்டால், மேக்கப் போட்ட பின் முகம் அழகாக காட்சியளிக்கும்

சிறந்த ஆப்டர் ஷேவ்
ஷேவிங் செய்து முடித்த பின், ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி பயன்படுத்தினால், ஷேவிங் மூலம் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவை நீங்கி, முகம் அற்புதமாக இருக்கும்.

சரும டோனர்
ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போகி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும். அதற்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications