Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்
சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முகத்தை தினமும் பல முறை கழுவ வேண்டியது அவசியம். அப்படி கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது தான் சிறந்தது. ஆனால் நம் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பலரும் தெரியாமல் இருப்பார்கள்.
உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா...?
பொதுவாக ஃபேஸ் வாஷ் வாங்கும் முன், நம் சரும வகையை மனதில் கொண்டு பின் வாங்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சரும வகை இருக்கும். அந்த சரும வகைக்கு ஏற்றவாறான ஃபேஸ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

எண்ணெய் பசை சருமம்
எண்ணெய் பசை சருமத்தினருக்கு முகப்பருக்கள் அதிகம் இருக்கும். எனவே பருக்களைப் போக்கும் வகையிலும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சரியான அளவில் எண்ணெய் பசையைப் பராமரிக்கவும் ஏற்றவாறான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஃபேஸ் வாஷில் சாலிசிலிக் ஆசிட் அல்லது பென்சோயில் பெராக்ஸைடு உள்ளதாக என பார்த்து பின் பயன்படுத்துங்கள்.

காம்பினேஷன் சருமம்
காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஸ் வாஷ் பொருந்துவது சருமம். ஏனெனில் இத்தகையவர்களுக்கு T-zone பகுதியில் எண்ணெய் பசை அதிகமாகவும், மற்ற பகுதியில் வறட்சியாகவும் இருக்கும். எனவே இத்தகையவர்கள் பால், சாலிசிலிக் ஆசிட் அல்லது பென்சோயில் பெராக்ஸைடு போன்றவை கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது நல்லது.

வறட்சியான சருமம்
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, அதிக அளவில் சரும வறட்சி ஏற்படுவதால், பால், க்ரீம் அல்லது எண்ணெய் கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது வறட்சியைப் போக்கி, சருமத்தில் எண்ணெய் பசையைப் பராமரிக்கவும் உதவும்.

சென்சிடிவ் சருமம்
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் ஆசிட் கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தை வெகுவாக பாதிக்கும்.

குறிப்பு
ஃபேஸ் வாஷை ஒருநாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தி வர வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications