Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
வறட்சியான சருமத்தினருக்கான எளிய சில வாழைப்பழ ஃபேஸ் பேக்குகள்!!!
சரும வறட்சி என்பது குளிர்காலத்தில் மட்டும் தான் வரும் என்பதில்லை, கோடைக்காலத்திலும் வரும். எப்படியெனில் சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்கி, சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, சருமம் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக சிலருக்கு கோடையில் உதடு வெடிப்புகள் ஏற்படும்.
சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சரும செல்கள் அதிகம் பாதிப்படைந்துவிடுகிறது. ஆகவே அதனை புத்துணர்ச்சியூட்டவும், சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கவும் அவ்வப்போது கோடையில் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புக்களில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
மேலும் வாழைப்பழம் விலை குறைவான ஒன்று என்பதால், அதனைக் கொண்டு விடுமுறை நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும் போது ஃபேஸ் பேக் போட்டு வந்தால், கோடையிலும் அழகாக காட்சியளிக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ மாஸ்க்குகளை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்
வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றம் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் வெண்ணெய்
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றி இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் வைட்டமின் ஈ பேக்
மசித்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஈ மாத்திரை பொடி/எண்ணெய் மற்றும் தேன் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் இளமையோடும், வறட்சியின்றியும் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் பேக்
வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை, வறட்சி போன்றவை நீங்கி, முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும்.

வாழைப்பழம் மற்றும் எலுமிச்சை சாறு
கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பாதிப்படைந்த சரும செல்கள் புதுப்பிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
