Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளை முயற்சி செய்யுங்க...!
ஒவ்வொருவருக்குமே பொலிவான சருமத்தின் மீது ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தான் தங்கள் சருமம் பொலிவோடு அழகாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும் தயாராக இருப்பார்கள். இருப்பினும் தற்போதைய காலத்தில் அனைவருமே கெமிக்கல் பொருட்களின் உபயோகத்தால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர்.
இதற்காக தங்கள் அழகைக் கூட இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிக்க விரும்புகின்றனர். சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டும் சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றையும் போட வேண்டும்.
முக்கியமாக இயற்கை வழிகளை கையாள நினைக்கும் போது, பொறுமை மிகவும் அவசியம். ஏனெனில் இயற்கை வழிகளினால் நமக்கு நன்மைகளானது சற்று தாமதமாக கிடைக்கும். ஆனால் அதன் நன்மை வாழ்நாள் முழுவதும் இருக்கும். இங்கு சருமத்தின் அழகை அதிகரிக்கவும், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, பொலிவோடு வெளிக்காட்ட உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

திராட்சை
உங்கள் சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், திராட்சைப் பழ ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால், சிறிது திராட்சையை எடுத்து மசித்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்
வெள்ளரிக்காய் ஜூஸில், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, வெளியே வெயிலில் செல்லும் முன்பும், வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின்பும், முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள்.

சந்தனப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் பால்
ஒரு பௌலில் சந்தனப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முகம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தேன் மற்றும் மில்க் க்ரீம்
தேனுடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் போட்டால், சருமம் பொலிவு பெறும்.

பால், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
சிறிது பாலுடன், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்துளைகள் சுத்தமாகி முகம் அழகாக காணப்படும்.

தக்காளி ஜூஸ்
தக்காளி சாறும் மிகவும் சிறப்பான சருமத்தை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்று. அதிலும் தக்காளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பட்டுப்போன்று பொலிவோடு காணப்படும். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை போடுவது மிகவும் நல்லது.

மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண்ணெய்
மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் மற்றும் தேன்
முட்டைக்கோஸ் கூட சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட உதவும். அதற்கு முட்டைக்கோஸை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

கேரட் ஜூஸ்
தினமும் கேரட் ஜூஸை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமத் துளை வெளிப்படுவது தடுக்கப்பட்டு, முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

தேன் மற்றும் பட்டை
பட்டை பொடியில் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது அதனை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, அதனால் தழும்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்
கடலை எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜெல் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யும் குணம் கொண்டது. எனவே அன்றாடம் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் உற வைத்து கழுவி வர, முகம் ஈரப்பசையுடன், பொலிவோடு இருக்கும்.

நெய் மற்றும் கிளிசரின்
நெய் மற்றும் கிளிசரினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி வந்தால், அது ஒரு அருமையான மாய்ஸ்சுரைசராக செயல்படும். மேலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மூல்தானி மெட்டி, ரோஜாப்பூ இதழ், வேப்பிலை, துளசி மற்றும் ரோஸ் வாட்டர்
இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

ஆப்ரிக்காட் மற்றும் தயிர்
ஆப்ரிக்காட் பழத்தை மசித்து, அதில் சிறிது தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து, அதனை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வறட்சியான சருமம் உள்ளவர்கள், இத்துடன் தேன் சேர்த்து கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications
