Latest Updates
-
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும் -
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும்
உதட்டைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க அட்டகாசமான வழிகள்!!!
பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் உதடும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதட்டின் அழகை கெடுக்கும் வண்ணம் அதனைச் சுற்றியுள்ள பகுதி கருமையாக இருக்கும். இந்த பிரச்சனையால் பல பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு அவ்விடத்தைச் சுற்றி மெலனின் என்னும் நிறமி அதிகம் இருப்பது தான் காரணம்.
ஆனால் இதற்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்தால், உதட்டைச் சுற்றியுள்ள கருமையை எளிதில் போக்கலாம். இங்கு உதட்டைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, உதட்டைச் சுற்றி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, நன்கு உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி ஜூஸ்
தக்காளி மிகவும் சிறப்பான ப்ளீச்சிங் பொருள். எனவே அந்த தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு உதட்டைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு
தினமும் உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது அதன் துண்டுகளைக் கொண்டோ, உதட்டைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், மெலனின் அளவு குறைந்து கருமை நீங்கும்.

ஓட்ஸ்
1/2 கப் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கருமை குறையும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. சருமத்தின் அழகை, நிறத்தை அதிகரிக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியம். எனவே வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.

தயிர்
தயிர் கூட கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. எனவே அத்தகைய தயிரை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

பால்
பாலும் கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு அன்றாடம் 2-3 முறை பாலைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அதனைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் மற்றும் வாயைச் சுற்றியுள்ள கருமை மறையும்.

முட்டை
உதட்டைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க முட்டையின் வெள்ளைக் கருவை தடவி உலர வைத்து கழுவி வந்தாலும் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை
எலுமிச்சை மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதனை உதட்டைச் சுற்றி தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருமை மட்டுமின்றி, உதட்டின் மேல் முடி வளர்வதும் நின்றுவிடும்.

கடலை மாவு
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதன் மூலமும் உதட்டைச் சுற்றியிருக்கும் கருமையைப் போக்கலாம்.

மஞ்சள்
மஞ்சள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. ஆகவே தினமும் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளித்தால், கருமை நீங்குவதோடு, முகச்சருமம் மென்மையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
