Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சருமத்தின் அழகை அதிகரிக்க.. யோகா குரு பாபா ராம்தேவ் கொடுக்கும் சில அழகு குறிப்புகள்!!!
சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கு எத்தனை முறைகள் வந்தாலும், இன்னும் பல இயற்கை வழிமுறைகளைத் தான் நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அதிலும் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் அசுத்தமான சுற்றுச்சூழலால், உடல் நலம் மட்டுமின்றி, சருமத்தின் அழகும் தான் பாதிக்கப்படுகிறது.
பொதுவாக மிகவும் பிரபலமான ஆன்மீக தலைவரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வைத்திருப்பார். அந்த வகையில் அவரிடம் சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கான ஒருசில தீர்வுகளும் உள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.
இதுப்போன்று சுவாரஸ்யமானவை: பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க...
இங்கு யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கு சொல்லும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றினால், தற்காலிகமாக மட்டும் அழகு பெறாமல், எந்த பக்க விளைவும் இல்லாமல் நிரந்தரமாக அழகுடன் திகழலாம்.

பிராணயாமா
பிராணயாமா என்னும் மூச்சுப் பயிற்சியை தினமும் செய்து வந்தால், நுரையீரலில் எந்த பிரச்சனை ஏற்படாமல் இருப்பதுடன், சருமமும் பொலிவோடு இருக்கும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என தொடர்ந்து ஆறு மாதம் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது கருவளையம் ஏற்படாமலும் தடுக்கும்.

பிரஷ் ஜூஸ்
பாபா ராம்தேவ் அவர்கள் சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமானால், கார்போனேட்டட் பானங்களான பெப்சி, கொகோ கோலா போன்றவற்றை அறவே தவிர்த்து, பழங்களைக் கொண்டு செய்யப்படும் பிரஷ் ஜூஸ்களை குடிக்குமாறு கூறுகிறார். இதனை செய்து வர தானாவே சருமம் பொலிவாகும் என்றும் சொல்கிறார்.

முகத்தை தேய்க்கவும்
தினமும் குளித்த பின்னர், மென்மையான துணியைக் கொண்டு 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் வரை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமமானது இறுக்கமடைந்து, சருமம் இன்னும் மென்மையாகும்.

நேர்மறையான எண்ணங்கள்
எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால், மனமானது சந்தோஷமாகவும், எவ்வித அழுத்தமின்றியும் இருக்கும். இப்படி மனமானது சந்தோஷமாக இருந்தால், முகம் தானாகவே பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கும்.

கற்றாழை
கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு முகம், கழுத்து மற்றும் கைகளை, தினமும் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தின் அழகு கூடும் என்று பாபா ராம்தேவ் சொல்கிறார்.

கடலை மாவு பேக்
பாபா ராம்தேவ், எப்போதும் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு தான் சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதிலும் இந்த பொருளைக் கொண்டு இரண்டு வழிகளில் சருமத்தைப் பராமரிக்கலாம் என்றும் சொல்கிறார். அதில் ஒரு வழி, தினமும் கடலை மாவு கொண்டு முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். மற்றொன்று கடலை மாவை ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், 1-2 வாரத்தில் நல்ல பலன் தெரியும் என்றும் கூறுகிறார்.

எலுமிச்சை
பாபாஜி சருமத்தின் அழகை அதிகரிக்கப் பரிந்துரைப்பதில் ஒன்று தான் எலுமிச்சையை பயன்படுத்துவது. அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் மற்றும் வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கலாம்.

பச்சை பால்
தினமும் இரவில் படுக்கும் முன், பச்சை பாலைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து, நீரில் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தின் நிறம் அதிகரித்து அழகாகக் காணப்படும்.

தண்ணீர் குடிக்கவும்
பாபாஜி கூட சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமானால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே தண்ணீரை குடியுங்கள்.

நல்ல தூக்கம்
சருமத்தின் அழகு மற்றும் பொலிவு அதிகரிக்க விரும்பினால், நல்ல தூக்கம் வேண்டும் என்று பாபா ராம்தேவ் சொல்கிறார். அதிலும் தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி, காலையில் ஒரே நேரத்தில் எழ வேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் தானாகவே சருமத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுத்து, அழகுடன் ஜொலிக்கலாம் என்றும் சொல்கிறார்.



Click it and Unblock the Notifications