Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மழைக்காலத்தில் சரும அழகை பராமரிக்க உதவும் ஃபேஸ் ஸ்கரப்கள்!!!
கோடைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். மழைக்காலத்தில் கூட பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக சருமமானது மழைக்காலத்தில் எப்போதும் ஈரமாக இருப்பதால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.
அதுமட்டுமின்றி, சில மழைக்காலத்தில் மிகவும் சூடான நீரில் குளிப்பார்கள். இதனால் சருமத்துளைகளானது திறக்கப்பட்டு, அதனுள் தூசிகளானது நுழைந்து தங்கிவிடும். இதனால் சருமத்தின் பொலிவானது குறைந்து காணப்படும். அதுமட்டுமின்றி, சுடுநீரில் குளித்துவிட்டு, ஏசியிலேயே இருப்பதால், சில சமயங்களில் சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும்.
எனவே எப்போதும் குளிக்கும் போது அதிக சூடாக இருக்கும் நீரில் குளிக்க வேண்டாம். மேலும் மற்ற காலங்களைப் போல் குளிர்காலத்திலும் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். இங்கு மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க உதவும் சில ஃபேஸ் ஸ்கரப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

ஓட்ஸ்
இந்த ஸ்கரப்பானது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன், சருமத்துளைகளின் அளவும் குறையும். அதற்கு 1/2 கப் ஓட்ஸில் தயிர் மற்றும் 1 துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, பின் சருமத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி ஸ்கரப்
பப்பாளியின் விதைகளை எடுத்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் ஒட்ஸ் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, வாரத்திற்கு இரண்டு முறை அதனைக் கொண்டு ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளின் அளவு குறையும்.

வால்நட் ஸ்கரப்
சிறிது வால்நட்ஸ் பருப்புக்களை எடுத்து, அதனை அரைத்து, அதில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும்.

நாட்டுச்சர்க்கரை ஸ்கரப்
நாட்டுச்சர்க்கரையில், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
