Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
முகச் சருமம் உரிதலுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்!!!
தோல் உரிதல் அல்லது தோலின் மேல் பகுதி உரிதல் போன்றவை தோலின் வெளிப்புற அடுக்கு உரிதலின் மூலம் ஏற்படுகிறது. இது உங்கள் தோலை நேரடியாக சேதப்படுத்துகிறது அல்லது சில கோளாறுகள் மற்றும் நிபந்தனைகளை முடிவாக கொடுக்கிறது. தோல் உரிதல் என்பது இயற்கையான ஒன்று. இது எந்த விதமான வயதுள்ள மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்று.
முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எனவே சில நேரங்களில் நீங்கள் அதை பிடுங்கி எடுத்துவிட்டால் அது உங்களுக்கு சிறந்தவையாக அமையும். நீங்கள் பிடுங்குவதால் இது நிஜமாகவே குணமடையாது. சில நேரங்களில் இப்படி நீங்கள் உங்கள் தோலில் இருந்து பிடுங்குவது, உங்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எனவே நீங்கள் இவ்வாறு பிடுங்குவதை விட சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்லது. முக சருமம் உரிதலுக்கான காரணங்கள், உங்களுக்கு சில சிகிச்சை முறைகளை பின்பற்ற உதவுகிறது. எனவே சில இதே மாதிரியான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேனிற்காயம்
முக சருமம் உரிதலுக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சால் உங்கள் தோல் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோலை சேதப்படுத்தி முக சருமம் உரிதலை ஏற்படுத்தும் காரணங்களாக அமையும்.

உலர்ந்த சருமம்
முக சருமம் உரிதலுக்கான காரணங்களில் உலர்ந்த சருமமும் ஒன்று. உங்கள் சருமம் உலர்ந்திருந்தால், இது சேர்ந்து ஒட்டி இருக்காது. இது உரிதலுக்கு வழிவகுக்கும். உலர்ந்த சருமம் என்பது குறைவான ஈரத்தன்மை அமைய காரணங்களாக உள்ளது, இது தீங்கு விளைவிக்கக்கூடிய க்ரீம்கள் மற்றும் குறைவான ஈரத்தன்மை உள்ள இடத்தில் வசிப்பதால் ஏற்படுகிறது.

ஒவ்வாமை அல்லது சிரங்கு
முக சருமம் உரிதலுக்கான காரணங்களில் சிரங்கு மற்றும் தடித்தல் மிகவும் முக்கியமானது. சில பொருட்கள் உங்களுக்கு ஒவ்வாமையாக இருக்கும், அதை சாப்பிடவும் செய்வோம் அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு உங்களுடைய முக சருமம் உரிதலுக்கான காரணத்தை ஏற்படுத்துகிறது. ரிங் வாம் போன்ற பூஞ்சை தொற்று, முக சருமம் உரிதலுக்கான காரணத்தை ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பிரச்சனைகள்
கேன்சர் மற்றும் பிற தோல் வியாதிகள் முக சருமம் உரிதலுக்கான காரணங்களில் ஒன்று.

மாய்ஸ்சுரைசர்
ஈரப்பதமாக சீரான இடைவெளியில் உங்கள் தோலை வைப்பதற்கு, சிறந்த காரணிகளை பயன்படுத்தி, முக சருமத்திற்கு தேவையான சிகிச்சைகளை எடுக்கலாம். நீங்கள் எப்பொழுதும் சிறந்த ஈரப்பத மூட்டிகளை கொண்ட பிராண்ட்டை தேர்ந்தடுக்கவும். நீங்கள் அதில் உள்ள ரசாயனங்களையும் சரி பார்க்க வேண்டும், இது ஒவ்வாமைக்கு ஒரு காரணமாக அமைகிறது.

ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளுதல்
உங்கள் டயட்டில் தேவையான புரோட்டின், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்றவற்றை சேர்த்தால், அது உங்கள் தோலை ஈரத்தன்மையுடன் வைக்க உதவுகிறது. இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்
துருவிய வெள்ளரி கூழ் இயற்கையான ஈரத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து உங்கள் முக சருமத்தில் உபயோகிக்க வேண்டும். நீங்கள் இந்த கூழுடன் ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் மஞ்சள் போன்றவற்றை சேர்த்து உபயோகித்தால் நல்ல விளைவு கிடைக்கும்.

தேன்
தேன் ஒரு சிறந்த முக சருமம் உரிதலுக்கான சிகிச்சைகளில் ஒன்று. நீங்கள் தேனை உங்கள் முகத்தில் குறுக்கே தடவவும் மற்றும் அதை ஒரு அரை மணி நேரத்திற்கு விட்டுவிட்டு முகத்தை கழுவ வேண்டும். இது உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மையை ஏற்படுத்துகிறது.

ஓட்ஸ்
ஓட்ஸ் குளியல் உங்கள் தோலிற்கு மிகவும் நல்லது. மேலும் குழந்தைக்கு பயன்படுத்தும் எண்ணெய் கூட உங்கள் தோலை ஈரத்தன்மையாக வைக்க உதவுகிறது.

பால்
நீங்கள் பாலில் ஒரு துணியை நனைத்து, அதை மெதுவாக உங்கள் முகத்தின் குறுக்கே தடவ வேண்டும். இது உங்களுக்கு ஒரு நல்ல முடிவை தருகிறது. இந்த வழியில் உங்கள் முகம் நீர்த்தன்மையுடன் உள்ளது மற்றும் இது தோல் உரிதலை குறைக்கிறது. பாலில் உள்ள புரோட்டின், உங்கள் தோல் உரியும் பிரச்சனையை சரி செய்யும். பாலில் உள்ள பாலமிலம் எதிர்ப்பு அழற்சிதன்மையை கொண்டுள்ளது, இது அழற்சியை குறைக்கிறது மற்றும் தோலில் நல்ல நீரேற்றிய தன்மையை ஏற்படுத்துகிறது. உண்மையில் சொறி கூட இந்த வழியின் மூலம் சரியாகிறது.



Click it and Unblock the Notifications
