Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
சோர்வுடன் காணப்படும் முகத்தை பொலிவாக்க சில வழிகள்!!!
நாள் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும், அனைவரும் படுக்கையில் போய் படுப்போம். ஒருமுறையாவது அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் முகத்தை கண்ணாடியில் பார்த்திருப்பீர்களா? அப்படி பார்த்தால், உங்களது உடல் சோர்வானது முதலில் உடலில் வெளிப்படுவதை விட, முகத்தில் தான் முதலில் வெளிப்படும். அதுவும் சரும சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் என்று பலவற்றின் மூலம் வெளிப்படும். அப்படி எப்போதுமே முகத்தை பொலிவிழந்து சோர்வுடன் வைத்துக் கொண்டால், யாருக்குமே நம்மிடம் சந்தோஷமாக பேச வேண்டுமென்று தோன்றாது. இவ்வுலகில் எவ்வளவு தான் மனம் நன்கு அழகாக இருந்தாலும், புற அழகைக் கொண்டும் மக்கள் பழகுகிறார்கள் என்பதை மறக்க வேண்டும்.
ஆகவே எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். அதற்கு ஒருசில செயல்களை செய்தாலேயே முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதுவும் அத்தகைய செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை, நிமிடத்தில் செய்யக்கூடியவையே. சரி, இப்போது முகத்தின் சோர்வை நீக்கி, அதன் பொலிவை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

முகத்தை கழுவவும்
முகத்தை கழுவுவதால், சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுக்குகள் மற்றும் மாசுக்களை மட்டும் நீங்குவதில்லை, சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு நாளைக்கு 3-4 முறையாவது முகத்தை கழுவுங்கள்.

ஸ்கரப்
வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமம் பொலிவோடு காணப்படும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் உப்பில், பாதி எலுமிச்சையை பிழிந்து, சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு
கண்களைச் சுற்றியுள்ள சோர்வு மற்றும் கருவளையத்தைப் போக்க, தினமும் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காய் துண்டை கண்களில் 5-10 நிமிடம் வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கோல்ட் க்ரீம்
முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன், முகத்திற்கு கோல்ட் க்ரீம் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனால் சருமத்தின் வறட்சி தடுக்கப்பட்டு, சருமம் பிரஷ்ஷாக இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க்
சருமத்தில் இருக்கும் சோர்வு நீங்கி, முகம் பொலிவோடு இருக்க வாரத்திற்கு 2-3 முறை ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். அதிலும் தயிரில் பால், மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் சோர்வு நீங்கி காணப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்து காணப்படும்.

ரோஸ் வாட்டர்
ஒரே நிமிடத்தில் சருமத்தின் சோர்வைப் போக்கி பொலிவோடு வெளிப்படுத்த வேண்டுமானால், காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

உணவில் உப்பை குறைக்கவும்
உணவில் அதிகப்படியான உப்பை சேர்த்தால், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, கண்களில் வீக்கம் மற்றும் சோர்வு அதிகரிக்கும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை குறைக்க வேண்டும்.

அதிகப்படியான தண்ணீர் குடிக்கவும்
சருமத்தை பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ஒரு சிறந்த வழியென்றால், அது தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது தான்.

நல்ல தூக்கம்
தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூக்கத்தைக் கடைப்பிடித்தாலே, சருமத்தில் ஏற்படும் சோர்வை போக்கி, பொலிவை அதிகரிக்கலாம். ஆகவே இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல், சரியான நேரத்தில் தூங்கி எழுங்கள்.



Click it and Unblock the Notifications
